சசிபெருமாள் மதுவிலக்கு போராட்டத்தில் மரணம் அடைந்த பிறகு தமிழ் நாட்டில் மதுவிலக்கு போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.
கலைஞர் மதுவிலக்கு கொண்டுவருவேன் என்றதும் எல்லாருமே போட்டி போட்டுக் கொண்டு மதுவிலக்கு கோஷம் போட ஆரம்பித்துவிட்டார்கள்.
அதிக பட்சமாக திடீரென்று இல்லாவிட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாகவாவது மதுவிலக்கை அமுல் படுத்த வேண்டும் என்பதுதான் எல்லார் கோரிக்கையும்.
இனிமேல் ஜெயலலிதா அமைதி காக்க முடியாது. வைகோ வின் கலிங்கப்பட்டியில் டாஸ்மாக் கடை அடித்து நொறுக்கப் பட்டது.
பல ஊர்களிலும் இதுபோல் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டது என்றால் எத்தனை கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது.?
ஊராட்சி தீர்மானம் போட்டால் ஏன் அந்த ஊரில் கடை போடவேண்டும் ?
குடிக்க வருபவன் சட்டப்படி வந்து குடித்துவிட்டு திரும்பிப் போகும்போது மோட்டார் சைக்கிளில் போனால் குற்றவாளி ஆகிறான்! இது முரண்பாடில்லையா???
கேரளாவில் உள்ளதுபோல் வீட்டுக்கு வாங்கிச்சென்று வீட்டில் குடிக்கட்டும்.
பார்களை முதலில் ஒழிக்கட்டும்! நேரத்தை பாதியாக குறைக்கட்டும்! கடைகளின் எண்ணிக்கையை மெல்ல மெல்ல குறைக்கட்டும்! ஊராட்சிகள் , வார்டுகள் , தீர்மானம் போட்டால் அங்கு திறக்க வேண்டாம் ! இப்படி கொஞ்சம் கொஞ்சமாக மதுவிலக்கை நோக்கி அரசு நடை போட வேண்டும். இது காலத்தின் கட்டாயம். கலைஞர் உணர்ந்து கொண்டார். ஜெயலலிதாவும் உணர்ந்து கொண்டால் நல்லது. இல்லாவிடில் தனிமைப் படுத்தப் படுவார் என்பதில் சந்தேகம் இல்லை.
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)