ஓம் பிரகாஷ் சவுதாலா – ஐந்து முறை முதல்வர் – ஜாட் இனத்தின் தனிப்பெரும் தலைவர். அவர் மகன் அஜய் சவுதாலா – ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சஞ்சீவ குமார் மற்றும் ஒருவர் -அனைவருக்கும் சி.பி.ஐ. நீதிமன்றம் அளித்த பத்து ஆண்டு சிறை தண்டனையை உயர் நீதி மன்றம் உறுதி செய்ததுடன் மற்ற ஐம்பது பேர்களுக்கு மட்டும் தண்டனையை இரண்டு ஆண்டுகளாக குறைத்தது.
குற்றம் 2000 ம் ஆண்டில் 3206 இளநிலை பயிற்சி பெற்ற ஆசிரியர் நியமனங்களை முறைகேடாக செய்தார்கள் என்பதுதான்.
” மாநிலத்தில் நிலவும் முதுகு எலும்பை சில்லிடச் செய்யும் அதிர்ச்சி அளிக்கும் நிலவரம் ” என்று ஊழலின் தன்மையை நீதிபதி மிருதுல் தனது நானூறு பக்க தீர்ப்பில் விமர்சிக்கிறார்.
அவரை ஒருமுறையாவது தமிழ் நாட்டுப் பக்கம் வரச் சொன்னால் எப்படியெல்லாம் விமர்சிப்பார் என்பதை நாம் கற்பனைதான் செய்து கொள்ள வேண்டும்.
கூடவே இருந்து காட்டிக் கொடுக்க முயற்சித்து தானும் மாட்டிக் கொண்ட அதிகாரி சஞ்சீவ் குமார் யார் , அவர் பின்புலம் என்ன என்பதெல்லாம் ஆய்வுக்குரியது.
உச்ச நீதிமன்றம் செல்ல இருக்கும் இந்த வழக்கின் முடிவு ஜெயலலிதா வழக்கிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
—
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)
+91-91766-46041
vaithiyalingamv@gmail.com
vaithiyalingamv@gmail.com