இலங்கையை காப்பாற்ற இந்திய அமெரிக்க கூட்டுச்சதி நிறைவேறியது??? போர்க்குற்றம்- இனப்படுகொலை குற்றச்சாட்டு எல்லாம் இனி ஓராண்டு கழித்து காணாமல் போய் விடும்!!! தமிழர் கூட்டமைப்பு வரவேற்ற மர்மம???

                  ஐ நா வின் மனித உரிமை கவுன்சிலால் நியமிக்கப் பட்ட குழுவே தனது அறிக்கையை தாக்கல் செய்தது;
                அதில் அதன் தலைவர்  குறிப்பிட்டு இருக்கும் கருத்து தெளிவானது.                      ஒன்று போர்க்குற்றம் குறித்து சர்வதேசிய நீதிபதிகள் அடங்கிய சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்.  இரண்டு, போர்க்குற்றம் குறித்து உள்நாட்டு விசாரணை உகந்தது அல்ல. 
         ஆனால் இலங்கை இதை ஒப்புக்கொள்ள முடியாது என்ற பிறகு அமெரிக்கா தனது நிலையை மாற்றிக்கொண்டு உள்நாட்டு விசாரணையில் காமன்வெல்த் நாட்டு நீதிபதிகள் ஆலோசனை சொல்லலாம் என்று புதிய தீர்மானத்தை வடிவமைத்து அது  
30  ம் தேதி வந்தது.   
            அதன் தலைப்பே சுமுக உறவையும் பொறுப்பேற்கும் தன்மையையும் மனித உரிமைகளையும் இலங்கையில் வளர்ப்பது  என்பதுதான்.   
           ஆக போர் க் குற்றமும் இன அழிப்புக்குற்றமும்  தீர்மானத்திலேயே இல்லை. 
              இந்தியா அமெரிக்கா சீனா உள்ளிட்ட 47  நாடுகளும் கொண்டு வந்த இந்த தீர்மானத்தை இலங்கையும் சேர்ந்து முன் மொழிந்தது.    
            விவாதமின்றி நிறைவேறிய இந்த தீர்மானம் மூலம் போர்க்குற்ற தண்டணை அநேகமாக இல்லை என்றே சொல்லலாம்.  
              இலங்கை அரசே விசாரிக்கும் நிலையில் அந்நிய நீதி பதிகள் என்ன மாற்றத்தை ஏற்படுத்தி விட முடியும்? 
                  தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த தீர்மானத்தை வரவேற்று  இருந்தாலும் அதன் முக்கிய  உறுபினர்கள் இந்த தீர்மானத்தால் எந்த விளைவும் ஏற்படப் போவதில்லை என்றே கருத்து கூறி இருக் கிறார்கள். .
               அநீதி மீண்டும் அரியணை ஏறி இருக்கிறது.