புராண இதிகாசங்களில் குறுப்பிடப்படும் சரஸ்வதி நதிக்கு புத்துயிர் கொடுக்க பா ஜ க ஆளும் ராஜஸ்தான் அரியானா அரசுகள் முனைப்புக் காட்டுகின்றன.
ராஜஸ்தான் மாநில நதிக்கரை மற்றும் நீர் வளத்திட்ட ஆணையத் தலைவர் ஸ்ரீராம் வேதிரே இந்த தகவலை கூறினார்.
ராஜஸ்தான் மாநில அரசு சரஸ்வதி நதிக்கு புத்துயிர் அளிக்கும் பணியை நதிக்கரை மற்றும் நீர் வளத்திட்ட ஆணையத்திடம் ஒப்படைதுள்ளதாம். இஸ்ரோ, மத்திய நீர் வள வாரியம் மாநில நிலத்தடி வாரியம் தேசீய நீரியல் மையம் ஆகியவற்றுடன் சரஸ்வதி நதி குறித்து மேற்கொள்ளப் போகும் ஆணையம் இணைந்து செயல் படுமாம்.
சரஸ்வதி நதியை கண்டறிவதற்கான பணியை அரியானா அரசு சரஸ்வதி நதி பாரம்பரிய வளர்ச்சி வாரியம் என்ற அமைப்பை ஏற்படுத்தி யுள்ளது. தற்போதும் நிறைந்து ஓடும சிந்து நதிக்கு இணையாக உள்ள பாலைவனப் பகுதி முற்காலத்தில் சரஸ்வதி நதியாக ஓடி அரபிக்கடலில் கலந்ததாக நம்பப் படுகிறது என்றும் வேதிரே தெரிவித்தார்.
ஓடும நதிகளை கவனிக்க மத்திய அரசுக்கு நேரம் இல்லை. இதில் இல்லாத நதியை தேடி எத்தனை கோடிகளை செலவழிக்கப் போகிறார்களோ?
இதை மூட நம்பிக்கை என்று சொல்லாமல் வேறெப்படி சொல்வது. ? அரசு பணம் விரயம் ஆவதை தடுக்க நீதி மன்றம் தலையிட முடியாதா?
மாநிலங்களுக்கு இடையே இருக்கும் நதி நீர் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு விட்டு எதையாவது செய்து கொள்ளுங்கள் என்று யார் சொல்வது?
பெரும்பான்மை இருந்தால் இப்படி அறிவுக்கு பொருத்தமில்லாத காரியங்களை செய்வதற்கு அதிகாரம் உண்டா?
ரொம்ப தப்பான வழியில் போகிறது பா ஜ க.!!!!
எதிர்ப்புக் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்!!!!!