ராசிபுரத்தில் பேசிய நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சுந்தரம் ஜெயலலிதா உடல்நிலை பற்றி பேசுபவர் நாக்கை வெட்டுவோம் என்று பேசியதாக தொலைக்காட்சி செய்தி கூறுகிறது.
சமீப காலமாக ஜெயலலிதா உடல்நிலை பற்றி பலவிதமாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதைப்பற்றி விளக்கம் சொல்ல வேண்டிய தமிழக அரசு மௌனம் காப்பதால் பலரும் பல விதமாக கருத்து தெரிவிக்கும் நிலை உளது.
இதை தடுக்க வேண்டியது யார் கடமை??/ அரசு மௌனம் காப்பது சரியா? முதல்வர் பொது ஊழியர். . பொதுமக்களுக்கு அவரைப் பற்றிய உண்மைகளை தெரிந்து கொள்ள உரிமை உள்ளது.
ஆனால் கண்டபடி ஆதாரம் இல்லாமல் எழுத காரணமாக இருப்பது யார்?
அரசு அறிக்கை வெளியிட்டு இதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.
சுந்தரம் போன்றவர்கள் இதுபோல் பொறுப்பற்று பேசுவதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)