ஸ்டாலின் கோயிலுக்கு சென்றது தவறா? கட்சிக்கு விரோதமானதா? அ தி மு க வின் விமர்சனத்தில் நேர்மையில்லை!!!

Share
              நமக்கு நாமே என்ற திட்டத்தில் மக்களை நாடு முழுவதும் சந்திக்க திட்டமிட்டு பயணம் வருகிறார் ஸ்டாலின்.   அதில் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்டம் திருகோஷ்டியூர் கோயிலுக்கு மனைவி துர்காவுடன் சென்றிருக்கிறார்.   மனைவி சாமி கும்பிட்டுக் கொண்டிருக்க ஸ்டாலின் கோவிலின் சரித்திர பூர்வ ஆதாரங்களை  பார்வை இட்டிருக்கிறார் .
             இந்தக் கோயிலின் தான் ஸ்ரீ ராமானுஜர் தனது குருவின் கட்டளையை மீறி கோபுரத்தில் அமர்ந்து கொண்டு ‘ ஓம் நோ நாராயணா’ மந்திரத்தை அனைவருக்கும் உபதேசித்தார் என்பது வரலாறு. அதைத்தான் கலைஞரும் ஸ்ரீ ராமானுஜர் என்ற பெயரில் கலைஞர் தொலைகாட்சியில் தொடராக வசனம் எழுதி வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.    மதத்ல் புரட்சி செய்த மகானாக ராமானுஜர் பாராட்டப் படுகிறார் என்பது உண்மை.
             உண்மையில் வைணவம் சாதிகளை அங்கீகரிப்பதில்லை. . சாதிகளை அங்கீகரிக்காத வைணவத்தில்தான் சாதி தனி  உரிமைகள் கோலோச்சி வருகிறது என்பதும்  உண்மை.
            ஸ்டாலின் மனைவி துர்கா தனது பக்தியை மறைத்ததில்லை.   அது அவரின் தனிப்பட்ட உரிமை.  அதற்கும் அரசியலுக்கும் என்ன தொடர்பு.?
             நாத்திகரின் மனைவிக்கு நம்பிக்கை இருந்தால் தவறா?  எல்லோரையும் மதிப்பது ஸ்டாலின் குணம்.    அந்த ரீதியில்தான் கோவில் வருகையும் இருந்திருக்கிறது.
              ஒருவகையில் ஸ்டாலின்  இந்துகளின் எதிரியல்ல என்பதை இந்த கோயில் வருகை உணர்த்தியிருக்கிறது.
              இதில் அ தி  மு க வருந்த என்ன இருக்கிறது?

This website uses cookies.