தமிழர்களை அவமானப் படுத்தும் ஜெயலலிதா

jayalalitha
நீதிமன்றம் குற்றவாளி என்று தீர்ப்பளித்தால் என்ன நான்தான் முதலமைச்சர் என்று பறை சாற்றிக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா.

    இவர் மேன்முறையீட்டு வழக்கில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராக வர முடிந்தால் அது வேறு.!
     ஆனால் தீர்ப்பு வரும் வரை கூட தற்காலிக முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பெயர் படம் எதுவும் அரசு விழாக்களில் வர அனுமதிக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பது தமிழர்களை அவமதிப்பதாக ஆகாதா?
     சென்னையில் நடந்த   குடியரசு தின அணிவகுப்பில் ஜெயலலிதா படமே ஆக்கிரமித்துக்கொண்டு இருந்தது.  டெல்லியில் நடந்த அணிவகுப்பில் தமிழகம் கலந்து கொள்ள அனுமதிக்கவில்லையாம்.
     தீவுத் திடலில் நடக்கும் பொருட்காட்சியில்   ஜெயலலிதா படங்களே காட்சியளிக்கின்றன.   பன்னீர்செல்வத்தின் ஒப்புதலோடு இது நடந்திருந்தாலும் அது சரியா என்பதுதான் கேள்வி?
     இங்கு எது நடத்தினாலும் கேட்க யாரும் இல்லை என்ற அளவில் காரியங்கள் நடப்பது இன்னும் எத்தனை நாளுக்கோ ?
     சென்னை உயர் நீதி மன்றம் சமீபத்தில் ஜெயலலிதா படங்களை அகற்றக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து விட்டது.  முன்னால் முதல்வர் படம் என்று அரசே கட்சியாடும்போது  நீதிமன்றம் தலையிட முடியாமல் போனது.
    தார்மீக கடமை என்பதே இல்லையா?     வாக்காளர்களுக்கு   பணம் கொடுத்து வெல்வேன் யார் கேட்பது?   முன்பு அவர்கள் செய்ய வில்லையா?    என்று அக்கிரமங்களை நியாயப் படுத்தும் போக்கு நிறுத்தப் பட்டே ஆக வேண்டும்.

வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)