வைரமுத்து நீதிமன்றத்தை அவமதித்தாரா? அறிவிப்பு அனுப்பிய நீதிபதிகள் தமிழ் அறிந்தவர்கள் அல்ல ? மனு கொடுத்தவரும் தமிழர் அல்ல. தவறாக பயன்படுத்தப் படும் நீதிமன்ற அவமதிப்பு சட்டம்???!!!

Share
நீதிபதி  கைலாசம் நினைவு நூற்றாண்டு விழாவில் பேசிய கவிஞர் வைரமுத்து நீதித்துறையில்  நீதிபதிகள் தவறுகள் செய்தால் நாடு என்னாகும் என்று கேட்டார்.    அதுவும் ஓய்வு பெறும் ஆறு மாதம் முன்பு தவறு செய்தால் நாடு என்னாகும் என்று கேட்டார்?
       தலைமை நீதிபதி கவுல், ரஜினிகாந்த்,ப சிதம்பரம் என முக்கிய பிரமுகர்கள் வந்திருந்த அவையில் தனது கவலையை கொட்டி விட்டார் கவிஞர்.     யாரையும் குறித்தோ வழக்கைச் சொல்லியோ பேசவில்லை.
              நீதிபதி கைலாசம் நினைவு விழாவில் நீதிபதிகளை பற்றி பேசாமல் யாரைப்பற்றி பேசுவது. ?
              கைலாசத்தைப்போல் நீதிபதிகள் ஒரு குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் இருந்தால்தான் நாடு காப்பாற்றப் படும் என்று பேசினால் என்ன தவறு?
          ஆனால் முகுந்த்சந்த் போதரா என்பவருக்கு கவிஞர் ஜெயலலிதா  வழக்கில் தீர்ப்பு  சொன்ன குமாரசாமி நினைவு வந்திருக்கும்போல் தெரிகிறது.
              உடனே நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் போட்டு அதில் நீதிபதிகள் அறிவிப்பும்  அனுப்பி இருக்கிறார்கள்.
            ஏன் அவர்கள் விழாவில் கலந்து கொண்ட தலைமை நீதிபதியை கலந்து கொள்ளவில்லை. ?
            எவரோ சொல்லியா நீதிமன்றம் தனது மரியாதையை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
             சட்டமே ஒரு அர்த்தமற்ற சட்டம்.    அவதூறு செய்யும் நோக்கம் இல்லாமல் சொல்லப்படும் எந்த குற்றச்சாட்டும் விசாரணைக்கு உகந்ததுவே.
           திருத்தும் நோக்கில் எதை வேண்டுமானாலும் சொல்லலாம்.
யாரையும் இழிவு படுத்தும் நோக்கம் யாருக்குமில்லை.
               வைரமுத்து கலைஞரோடு நட்போடிருப்பவர்.   அரசியல்வாதியல்ல .
                 அவருக்கு ஜெயலலிதா எதிரியுமல்ல.
           நீதிபதி கர்ணன் சக நீதிபதிகள் மீதும் தலைமை நீதிபதி மீதும் குற்றம் சுமத்தினாரே?
            தத்து முன்பு ஜாமீன் வழங்கிய வழியில் கோடிகணக்கில் ஊழல் என்று குற்றம் சுமத்தியவர்கள் மீது அவதூறு வழக்கு போட ஏன் அவர் மறுத்தார்.?
            பல நீதிபதிகள் ஊழல் செய்தவர்கள் என பட்டியலை நீட்டிய வக்கீல் பிரஷாந்த பூஷன் மீது ஏன் வழக்கு பாயவில்லை.?
             சும்மா இருந்த வைரமுத்துவை சீண்டி இருக்கிறார்கள்!
இனி அவர் ஏன் சும்மா இருக்க வேண்டும்?

This website uses cookies.