கோகுல்ராஜை கொன்றது சாதி வெறியர்கள்? கவுரவக் கொலைகளை தடுக்கக்கூடிய தனிச்சட்டம் தேவை!!!!
Share
ஓமலூர் என்ஜினியர் கோகுல்ராஜ் என்பவர்பின் உடல் ரெயில் தண்டவாளத்தில் கிடந்தது. அவர் தாழ்த்தப் பட்ட வகுப்பை சேர்ந்தவர். அவருக்கும் கவுண்டர் வகுப்பை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் காதல் இருந்ததாகவும் அதனால் பெண்ணின் வகுப்பை சேர்ந்தவர்கள் அந்தப் பையனைக் கொன்று தண்டவாளத்தில் போட்டு விட்டதாக கூறி சில நாட்களாக பல போராட்டங்கள் நடந்தன.
இப்போது இந்த வழக்கு சம்பந்தமாக ஆறு பேர் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருக்கிறார்கள்.
— விசாரணையில் கோவிலுக்கு வந்த காதல் ஜோடியை சின்னமலை பேரவையை சேர்ந்தவர்கள் விசாரித்து இருவரும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்து பெண்ணை மட்டும் அனுப்பி விட்டு இந்த பையனை மட்டும் அழைத்து சென்று கொன்று வீசியிரு;கிறார்கள்.
தனிப்பட்ட விரோதம் ஏதுமில்லாமலே மாற்று சமூகத்தை சேர்ந்தவர் என்பதாலேயே கொன்றிருக்கிறார்கள்.
தர்மபுரி இளவரசன் -தொடர்ந்து இப்போது ஓமலூர் கோகுல்ராஜ். கேள்விக்குறியாகி நிற்கிறது தமிழ்ச் சமுதாய ஒற்றுமை.