கிரிக்கெட்- இந்தியாவின் பணம் கொழிக்கும் விளையாட்டு.
ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக ஜக மோகன் டால்மியா மற்றும் சீனிவாசன் இருவருமே பல்வேறு வகைகளில் குற்றம் சாட்டப் பட்டு நீதி மன்றங்களால் தகுதி நீக்கம் செய்யப் பட்டவர்கள்.
இந்திய கிரிக்கெட் வாரிய அமைப்பு முறைகள் முற்றிலும் சாதிய ஆதிக்கத்துக்கு வழி கோலும் வகையில் இருப்பதாக பல காலமாக குற்றம் சாட்டப் பட்டு வந்தாலும் அவைகளை மாற்றும் முயற்சிகளில் யாரும் தீவிரம் காட்டாததால் சாதிய ஆதிக்கம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
மக்களின் பிரதிநிதிகளான மாநில அரசுகளின் பங்கு கிரிக்கெட் வாரிய அமைப்பில் என்ன இருக்கிறது. ?
வெளிப்படையான, சுதந்திரமான ,, அனைத்து தரப்பு மக்களையும் பிரதிபலிக்கும் வகையில் ,தேர்வு முறை ஒன்றை உருவாக்கும்போது மட்டுமே இந்திய கிரிக்கெட் குழு உண்மையில் இந்தியாவை பிரதிபலிக்கும் .
ஊழல்தான் கிரிக்கெட் என்றால் அந்த விளையாட்டுக்கு எதிராகவே ஒரு இயக்கம் உருவாக வேண்டும்.
—
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)
+91-91766-46041
vaithiyalingamv@gmail.com
vaithiyalingamv@gmail.com