மக்கள் ஆய்வக இயக்குனர் பேராசிரியர் ராஜநாயகம் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் மீண்டும் முதல்வராக ஜெயலலிதாவிற்கு அதிக ஆதரவு தெரிவிக்கப் பட்டாலும் அடுத்த இடத்துக்கான போட்டியில் கருணாநிதியை மிஞ்சினார் ஸ்டாலின் என்பதுதான் கவனிக்க வேண்டிய தகவல்.
ஜெயலலிதா -31.56 % ஸ்டாலின் -27.98 % – கருணாநிதி – 21.33%, விஜயகாந்த் -6.24 %, அன்புமணி ராமதாஸ் – 2.27 % , அடுத்தடுத்த இடங்களில், வைகோ, திருமாவளவன் ,ஜி.கே.வாசன் தமிழிசை,சீமான் ஆகியோர் இடம் பிடிக்கிறார்கள்.
எந்த கட்சிக்கு வாக்கு என்ற கேள்விக்கு அ.தி.மு.க என்று 34.1 % பேரும் , தி. மு க என்று 32.6% பேரும், தே.மு.தி.க 4% perum, பா.ம.க என்று.3 % perm பா. ஜ.க என்று 2.9 % பேரும் காங்கிரஸ் என்று 1.6% பேரும் வாக்களித்திருக்கிறார்கள். .
தி மு க – அ தி மு க விற்கு மாற்றுக் கட்சி கிடையாது என்று பெரும்பான்மையோர் வாக்களித்திருக்கிறார்கள்.
3370 பேரிடம் 28 மாவட்டங்களில் 80 சட்ட மன்ற தொகுதிகளில் செய்யப் பட்ட இந்த ஆய்வு எந்தளவு இன்னும் எட்டு மாதங்களுக்குப் பிறகு செல்லுபடியாகும் என்பதை விட சமூக உளவியல் அடிப்படையில் செய்யப் பட்ட இந்த ஆய்வு ஓரளவு மக்கள் மனநிலையை பிரதிபலிக்கிற வகையில் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
மிக முக்கியமாக கருணாநிதியை விட ஸ்டாலின் அதிக வாக்கு பெற்றிருப்பது அவரது ஏற்றுக்கொள்ளத்தக்க தன்மையை உறுதி செய்கிறது. இனி சில மாதங்களில் கலைஞர் முதலைமைச்சர் வேட்பாளராக ஸ்டாலினை அறிவித்தால் ஆச்சரியம் ஒன்றுமில்லை .
அ தி மு க விற்கும் தி மு க விற்கும் இருக்கும் வித்தியாசம் சொற்ப அளவே என்னும்போது இடைப்பட்ட எட்டு மாதங்கள் இந்த இடைவெளியை குறைக்கும் என்பது உறுதி.
மதுவிலக்கை மிகப் பெரும்பான்மையோர் ஆதரிக்கிறார்கள் என்பது பல கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும்..
ஐந்து கட்சி கூட்டணி கணக்கிலேயே இல்லை. மூன்றாம் இடத்தை குறி வைப்பவர்கள் முதல் இடம் பிடிக்க இருப்பவர்களின் எதிர்ப்பு வாக்குகளை பிரிக்க மட்டுமே உதவுவார்கள். ஒருவேளை அதுவே திட்டமாகவும் இருக்கலாம்.
மருத்துவர் ராமதாஸ் இந்த கருத்து கணிப்பை மறுதலித் ததுடன் இதன் பின்னணியில் தி மு க இருக்கிறது என சொல்லியிருப்பது அவர் நிதர்சனத்தை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை என்பதையே காட்டுகிறது.
எப்படியோ நல்லது நடந்தால் சரி.