முருகன் ,சாந்தன்,பேரறிவாளன் விடுதலை தாமதமாவது ஏன் ? காங்கிரசின் அடிச்சுவட்டில் பா.ஜ.க.?/

              உச்சநீதிமன்றம் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேருக்கும் தூக்கு தண்டணை கிடையாது என்றும் ஆயுள் தண்டணை மட்டுமே என்றும் தீர்ப்பு செய்தது ,மத்திய அரசு சார்பில் செய்யப்பட்ட  curative petition  ஐ தள்ளுபடி செய்தது மூலம் உறுதி செய்யப் பட்டுள்ளது.   
              இப்பொழுது இருக்கும் ஒரே கேள்வி ஆயுள் தண்டணை என்பது  14  ஆண்டுகளா அல்லது ஆயுள் வரைக்குமா  என்பதும் அதை முடிவு செய்வது மாநில அரசின் அதிகாரமா அல்லது மத்திய அரசின் ஒப்புதலுடனா என்பதும் மட்டும்தான்.  
              சி.பி.ஐ சம்பத்தப்பட்ட வழக்குகளில் மாநில அரசு தண்டணை குறைப்பு செய்ய முடியுமா என்பதும் நிலுவையில் உள்ளது. அந்த பெஞ்ச் தீர்ப்பு வர எத்தனை நாளாகும் என்பது தெரியாது.   அந்த விசாரணையை விரைவு செய்ய வேண்டிய கடமையும் தமிழக அரசுக்கு உண்டு. 
                 அவசரப்பட்டு ஜெயலலிதா சட்டமன்றத்தில் மத்திய     
அரசு  ஒப்புதல் அளித்தாலும் அளிக்காவிட்டாலும் விடுதலை செய்வோம் என்று அறிவித்து மத்திய அரசு உச்சநீதி மன்றம் செல்ல வழி வகுத்தார். 
               அப்படி இல்லாமல் இம்முறையாவது அவர்கள் விடுதலை பெற எந்த தடையும் ஏற்படா வண்ணம் செயல்பட்டு அவர்கள் விடுதலை ஆவதற்கு தமிழக அரசு உண்மையாகவே முயற்சிக்கவேண்டும் என்பதே தமிழ் மக்கள் வேண்டுகோள்.    
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)