நேர்மையற்ற வெற்றி நிலைக்குமா? ஆர் கே நகரில் ஜெயலலிதா பெற்ற வெற்றி பெருமைப்படத்தக்கதா ?

முழுப்பூசணிக்காயை சோற்றில்  மறைக்க முடியமா?
                     முடியும் என்று நிரூபித்திருக்கிறார் ஜெயலலிதா!
              நாடே விழித்திருக்கையில் இத்தனை அக்கிரமங்களை பட்டப் பகலில் நிகழ்த்த முடியுமா? 
                முடியும் என்றும் நிரூபித்திருக்கிறார்!
               சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றவுடன் ;உச்சநீதி மன்றத்தில் பிணை பெற்ற வேகம், மூன்று மாதத்துக்குள் மேல்முறையீட்டை முடிக்க சொல்லி உத்தரவு சொல்லிவைத்தாற்போல் விடுதலை  தீர்ப்பில் கண்ட தவறுகளை பல நாளேடுகளும் சுட்டிக் காட்டிய பின்பும் கவலையே படாமல் தேர்தல் ஆணையம் மூலம் குறிப்பிட்ட தேதியில் இடைத்தேர்தல் ,அதில் ரஜ கஜ துரக பதாதிகளை இறக்கி எல்லாரையும் முடக்கி வெற்றி அறிவிப்பு ,மீண்டும் சட்ட மன்ற உறுப்பினர்.    உச்சநீதி மன்ற மேல்முறையீடு கர்நாடக அரசுக்கு வெற்றி கொடுத்தால் அல்லது உச்சநீதி மன்றம் ஏதாவது இடைக்கால உத்தரவு இட்டால் எல்லாம் இல்லாமல் போய் விடுமே  என்ற எந்த கவலையும் இல்லாமல் அதற்கும் ஒரு விலை இல்லாமலா போகும் என்ற நம்பிக்கை!!!   
              ஒண்ணரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் ஜெயலலிதா?  கம்யூனிஸ்டு மகேந்திரன் வாங்கிய ஒன்பதாயிரத்து எழுநூறு வாக்குகளும் டிராபிக் ராமசாமி வாங்கிய இரண்டாயிரத்து அறுநூறு வாக்குகளும் விலை மதிப்பற்றவை . 
                துணிச்சலை பாராட்டலாம் !     தவறு செய்கிறவர்களுக்கு இருக்கும் துணிச்சல் பாராட்ட தக்கது தானா? 
               அது தவறை ஊக்குவிப்பது ஆகாதா?    தவறுக்கு ஊதியம் அளிப்பது ஆகாதா?   
                   யார் செய்தாலும் தவறு தவறுதான்.   திருமங்கலத்தில் தி.மு.கவுக்கு அப்படி ஒரு பெயர் சூட்டினார்கள்.   அதற்குரிய தண்டனையை மக்கள் அவர்களுக்கு வழங்கி விட்டார்கள். 
                 ஆணவப் போக்கையும் அதிகார துஷ் பிரயோகத்தையும் தனது ஆட்சி முறையாக்கி கொண்டுள்ள ஜெயலலிதா அதற்குரிய பலனையும் இனி எதிர்பார்த்தே இருக்க வேண்டும். 
              இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வது
 அஹ்தொப்பது இல் என்றார் வள்ளுவர். 
                 அதாவது துன்பம் வரும்போது கலங்காதே அடுத்து வருவது மகிழ்ச்சி தரும்  என்று பொருள்.   
                 அதன் இன்னொரு பொருள்.    முறையற்ற இன்பம் வரும்போது அதிகம் ஆடாதே . ஏனெனில் அடுத்து வருவது வருத்தம் தரும் ???