விவசாய விளைபொருள் விலை நிர்ணயத்தில் மத்திய அரசின் கொடுஞ்செயல் !!! லாபவிலை நிர்ணயிக்க முடியாது என உச்சநீதி மன்றத்தில் வாக்குமூலம்.!!!! விவசாயிகளின் எதிர்காலம் என்ன????
Share
விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உச்சநீதி மன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தாக்கலானது . விவசாயம் லாபமில்லாத தொழிலாகி விட்டதால் , உற்பத்தி செய்பவர்கள் பெருங்கடனாளிகளாக மாறி தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு செல்கின்றனர் என்பதால் தேசிய விவசாயிகள் கொள்கை ஒன்றை உருவாக்கி குறைந்த பட்ச ஆதரவு விலையை அதிகப் படுத்தி விவசாயிகளை காக்க வேண்டும் என்பது கோரிக்கை.
நீதிபதிகள் முகோபாத்யாயா மற்றும் ரமணா அமர்வு முன் வந்த விசாரணையில் மத்திய அரசு அவிடவிட்டு தாக்கல் செய்தது.
” இருபத்தி இரண்டு விவசாய விளைபொருள்களுக்கு நியாயமான லாபம் தரும் விலையை நிர்ணயம் செய்யும் பணியை விவசாய செலவு மற்றும் விலை கமிஷன் பரிந்துரை பேரிலேயே செய்யப் படுகிறது. உற்பத்தி செலவு , தேவையும் கிடைப்பதும் ( demand and supply ) உள்நாட்டு மற்றும் சர்வதேச மார்க்கெட்டில் விலை நிலவரம், தானியங்களுக்கிடையே ஆன விலை ஒப்பீடு , விவசாயம் மற்றும் விவசாயம் அல்லாத துறைகளுக்கு இடையே ஆன வியாபார நிபந்தனைகள் , மற்றும் குறைந்த பட்ச ஆதரவு விலை பயன்பாட்டாளர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம் இவை களின் அடிப்படையிலேயே குறைந்த பட்ச ஆதரவு விலையும் நியாயமான லாபம் தரும் விலையும் நிர்ணயம் செய்யப் படுகின்றன. ” இதுதான் அந்த அவிடவிட்டின் சாராம்சம்.
அதிலும் குறிப்பாக குறைந்த பட்ச ஆதரவு விலை என்பது உற்பத்தி செலவுக்கு மேல் நிர்ணயிக்கப் படுவது அல்ல . செலவு முக்கியமான அம்சமான ஒன்றாக இருந்தாலும் என்று வெளிப்படையாக சொல்லி இருக்கிறது மத்திய அரசு.
இதைவிட கேவலம் ஒன்று இருக்க முடியுமா?
வேறு தொழில் செய்பவர்களிடம் போய் உங்கள் உற்பத்தி செலவை விட லாபம் வைத்து விலை நிர்ணயம் செய்யாதீர்கள் என்று மத்திய அரசு சொல்லுமா?
அவர்கள்தான் கேட்பார்களா?
உச்சநீதி மன்றம் என்ன சொல்லப்போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்???