மோடிக்கு தேர்தல் பொறுப்பாளர் பதவி கொடுத்ததும் ,அதை ஆட்சேபித்து அத்வானி மூன்றாவது முறையாக பதவிகளை ராஜினாமா செய்ததும் ஆர் எஸ் எஸ் அமைப்பின் தலைவர் தலையிட்டதும் ராஜினாமாவை வாபஸ் பெற்றதும் ஏதோ ஓர் நாடகம் போல் தோன்றினாலும் பல உண்மைகளை இந்த நிகழ்வுகள் வெளிச்சத்துக்கு கொண்டு வந்து விட்டன
பா ஜ க என்ற அரசியல் கட்சி ஆர் எஸ் எஸ் என்ற அமைப்பின் கட்டுப் பாட்டில்தான் இயங்குகிறது.
சுஷ்மா ஸ்வராஜ் ராஜ பக்சேவிடம் விலை போய் விட்டார் என்பது அவர் இலங்கை போய் வந்து அங்கு உள்ள தமிழர்கள் தனி நாடு கேட்க வில்லை என்று சென்னையில் பேசிய போது வெளிப்பட்டது.
இப்போது ரவி சங்கர் பிரசாத் இலங்கை போய் வந்து சிங்கள ஆட்சிக்கு சான்றிதழ் கொடுக்கும் விதமாக நிவாரண வேலைகள் நன்றாக நடக்கின்றன என்று பேசினார். தன்னுடன் தமிழகத்திலிருந்து யாரையாவது அழைத்துக் கொண்டு போயிருந்தாலாவது அவரது பேச்சுக்கு பொருள் இருந்திருக்கும். ஆக பா. ஜ. க. தலைமை சிங்கள ஆட்சியாளர்களின் ஊதுகுழல் ஆகி விட்டார்கள்.
அத்வானியின் இறங்கு முகத்திற்கும் ஆர் எஸ் எஸ் தான் காரணம்.
தனக்குப் பயன் படுகிற வரைதான் ஆர் எஸ் எஸ் எவரையும் தாங்கிப் பிடிக்கும்.
பயன்படாத எவரையும் தூக்கி எறிய அது தயங்காது.
கட்சியின் செயல்படும் தன்மையில்தான் தனக்கு ஆட்சேபணை என்ற அத்வானியின் கருத்துக்கு எந்த விளக்கமான பதிலையும் அவர்களால் கொடுக்க முடியவில்லை.
வழிகாட்ட மட்டும் அத்வானி வேண்டும். தலைமையேற்க அல்ல என்பதை மிக உறுதியாக சங்கம் தெரிவித்து விட்டது.
வெற்றியைக் கொடுப்பார் என்ற நம்பிக்கைதான் இப்போது மோடியை முன்னிறுத்துகிறது. அவரால் அது முடியாது என்று எப்போது உணருகிரார்களோ அப்போது அவரும் தூக்கி எறியப் பட்டுவிடுவார்.
அதற்கெல்லாம் விதி விலக்கு பெரும் வகுப்பில் அவர் பிறக்க வில்லையே.
தலைவர்கள் சுயநலமிகளாகிவிட்டர்கள் என்ற அத்வானியின் குற்றச்சாட்டு அப்படியே இருக்கிறது. அதாவது பா. ஜ. க. என்பது இனிமேல் பாரதத்திற்கு ‘தீய ‘கட்சிதான் . அதாவது பாரதீய என்றால் பாரம் என்ற சுமையையம் ‘ தீய’ என்ற தீமையையும் மட்டுமே தரக் கூடிய கட்சி.