அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல். இப்போதே களை கட்டிவிட்டது தேர்தல் திருவிழா !!!
தி மு க வுக்கு மக்கள் விரோத, பெரியார் அண்ணா கொள்கைகளுக்கு மூடு விழா நடத்தும் ஜெயலலிதாவின் அ தி மு க வை ஆட்சியில் இருந்து அகற்றுவதுதான் ஒரே நோக்கம் .
தமிழகத்தில் திமுக அணி ,அதிமுக அணி தவிர்த்து இரண்டையும் எதிர்க்கும் புது உருவம் எடுத்திருக்கும் பா.ம. க ,சீமானின் நாம் தமிழர் கட்சி என்று; பல அணிகள் களத்தில்.
ஒரு தேர்தலில் தேமு தி க தனித்து நின்றதால் 21 இடங்களில் அ தி ம க வென்றது. காரணம் அ தி மு க எதிர்ப்பு ஓட்டை பிரித்தல்.
அதே வலை இப்போதும் பின்னப் படலாம். அதற்கென தனியாக கூலி கிடைத்தால் வேண்டாம் என்பவர்கள் எத்தனை பேர்? திருமாவளவன் ஜவாஹரில்லா , இப்போது காங்கிரசின் இளங்கோவன் ஆட்சியில் பங்கு கொடுப்பவர்களுடன் கூட்டணி.???
ஒன்பது மாதங்களுக்கு முன்பே கூட்டணியின் தன்மை பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன?
யாரை தோற்கடிக்க வேண்டும் என்பதில் கருத்தொற்றுமை இருக்கும் பட்சத்தில் வெற்றி பெற என்ன வியூகம் என்பதில் அக்கறை செலுத்தாமல் கூட்டணியை பலவீனப் படுத்தும் விதத்தில் என்ன பேசினாலும் அதற்கு அர்த்தம் ஒன்றுதான். இவர்கள் நோக்கம் வேறு????
கலைஞர் திறந்த மனதுடன் இருக்கிறார். தேர்தல் அறிவிக்கப் பட்டவுடன் பேசினால்தான் நல்ல முடிவை எடுக்க முடியும். வியூகத்தை இப்போதே வெளிப்படுத்துவது பலவீனமாக் கிவிடும் அல்லது எதிரியை மாற்று திட்டம் தீட்ட இடம் கொடுத்தது போல் ஆகி விடும் என்பது இவர்களுக்கு தெரியாதா???
இவர்களில் ஒருசிலர் , அதிமுக வின் திட்டப்படி அதிமுக எதிர்ப்பு வாக்குகளை பிரிப்பதற்கு திட்டமிட்டு துணை போகிறவர்கள் என்ற முத்திரையை எதிர் காலத்தில் சுமப்பார்கள்.
நிறைய திருப்பங்களை எதிர் நோக்கி இருக்கிறது அடுத்த பொதுத்தேர்தல்.
—
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)