சோனியா மாப்பிள்ளை ராபர்ட் வதேரா மீது மெகா மோசடிக் குற்றச்சாட்டு!!! ராகுலும் பிரியங்காவும் தங்களுக்கு தொடர்பில்லை என்று சொல்ல முடியுமா??? குற்றம் உறுதி செய்யப் பட்டால் சோனியா குடும்பம் அரசியலில் இருக்கலாமா??????

             தொழில் செய்து சம்பாதிப்பது என்று கேள்விப்பட்டு இருக்கிறோம்.    வியாபாரமே செய்யாமல் லைசென்சை கைமாற்றி விட்டு மட்டுமே ஐம்பது கோடி சம்பாதித்து இருக்கிறார் வதேரா .
                இவரது ஸ்கைலைட் ஹாச்பிடாலிடி நிறுவனம் அரியானா அரசு தனக்கு வழங்கிய குடியிருப்புகள் கட்டும் லைசென்சை எட்டு மடங்கு விலைக்கு கைமாற்றி விட்டிருக்கிறார். 
                 அதாவது டி.எல்.எப். நிறுவனத்திடம் எட்டு கோடி ஜாமீன் இல்லாக் கடன் வாங்கி அதை வைத்து  3.5   ஏக்கர் நிலத்தை      7.5  கோடிக்கு  அரியானா அரசிடம் வாங்கி குடியிருப்பு லைசென்சுடன் விவசாய நிலத்தை குடியிருப்பு பகுதி யாக மாற்றி   58  கோடிக்கு டி.எல்.எப். கம்பெனியிடமே விற்று ஐம்பது கோடி சம்பாதித்த சாமர்த்தியம் சோனியா மருமகன் வதேராவைத் தவிர வேறு யாருக்கு வரும்???
                     இந்த மோசடியை கண்டு பிடித்து நடவடிக்கை எடுத்த அரசு அதிகாரி அசோக் கெம்கா முந்தைய  காங்கிரஸ் அரசால பழி வாங்கப் பட்டார். .   
                      இன்னும் வேறு நான்கு நிறுவனங்களும் இதே போல்  அதே கம்பெனிக்கு   267   கோடிக்கு லைசென்சுகளை  விற்றிருக்கிறார்கள்     
                 அரசுக்கு சில நூறு கோடிகள் இழப்பு ஏற்படுத்தியது தவிர இதில் ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. 
                   இதில் சோனியா, ராகுல், பிரியங்கா  ஆகியோரின் பங்கு என்ன என்பதுதான் நாடு அறிந்து கொள்ள வேண்டிய செய்தி  இது வரையில் வதேரா இந்த குற்றச்சாட்டு பற்றி விளக்கம் ஏதும் சொல்ல வில்லை.
                  சோனியா குடும்ப ஆதிக்கம் இல்லாத காங்கிரசை காங்கிரஸ்காரர்கள் சிந்திக்க வேண்டிய  கால கட்டம் இது. 
             
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)