தமிழர்களுக்கு நீதி கிடைக்க ஒருபோதும் சிங்களர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.
போர் முடிந்து ஆறு ஆண்டுகள் ஆகியும் இதுவரை எவரும் இனப்பிரச்சினைக்கு முடிவு கட்ட முயற்சி எடுக்கவில்லை.
இன அழிப்பு நடத்திய போர்க்குற்ற விசாரணை நடத்த யாரும் தயாராக இல்லை. மீள குடியேற்றம் என்ற பெயரில் ஒரு சில பேரை குடியமர்த்தி உலகை ஏமாற்றுகிறார்கள்.
கடந்த ஆண்டு ஐ நா மானிட உரிமை கவுன்சிலில் சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய அமெரிக்கா இன்று உள்நாட்டு விசாரணை நடத்தலாம் என பல்டி அடித்ததை ஏற்க முடியாது என்று இலங்கை வடக்கு மாகாண சபை தீர்மானம் இயற்றியிருக் கிறது .
எதிரிகளே இல்லாத நாடான இலங்கைக்கு இந்தியா இரண்டு போர்க்கப்பல்களை இனாமாக வழங்குகிறது. யாரை தாக்க? தமிழர்களைத்தானே??? அவர்களது மீன்பிடி உரிமைகளை நசுக்கதானே?
. இந்நிலையில் 38 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு தமிழரை , சம்பந்தன் அவர்களை எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்து எடுக் கிறார்கள் . 1977 ல் எதிர்க்கட்சி தலைவரான அமிர்தலிங்கம் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு தனி நாடு கோரிக்கையை வலியுறுத்த மாட்டேன் என்று உறுதிமொழி எடுக்க மறுத்து ராஜினாமா செய்தார்.
அரசை எதிர்த்து எதுவும் செய்ய இயலா நிலையில் எதிர்க்கட்சி தலைவர் பதவி என்பது உலகை ஏமாற்றத்தான். .
அதோடு தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவர் ஆக இருக்கும்போது உள்நாட்டு விசாரணை ஏன் முறையாக நடக்காது என்ற கேள்வியையும் எழுப்புவார்கள்.
இரண்டு சிங்களக் கட்சிகளும் சேர்ந்து தேசிய அரசு அமைக்கும் அளவுக்கு அவர்களுக்குள் புரிதல் இருக்கிறது..
காலங்காலமாக கொஞ்சம் கொடுப்பது பின்பு பிடிங்கிக் கொள்வது என்ற நாடகத்தை தவறாது நடத்தியவர்கள்.
இதுவரை எத்தனை ஒப்பந்தங்களை அமுல்படுத்தாமல் கிழித்து எறிந்திருக்கிறார்கள் என்ற பட்டியலை நினைத்துப் பார்த்தால் மட்டும்தான் அவர்களின் உண்மை முகம் தெரியும்.
நடக்கட்டும் நாடகம்!!! எதற்கும் ஒரு முடிவு உண்டல்லவா? அது வராமலா போய்விடும்?!!!