நாங்கள் கற்பழித்த போது அவள் போராடியிருக்ககூடாது – நிர்பயா கொலைகாரனின் வாக்குமூலம்!!!

                    டெல்லியில் கற்பழிக்கப் பட்டு கொடூரமாக கொலை

செய்யப்பட்ட மாணவி நிர்பயாவின் கொலைகாரன் முகேஷ் சிறையில் இருந்து கொண்டே அளித்த பேட்டியில் , ”   நாங்கள் அவளை கற்பழித்தபோது  அவள் எதிர்த்துப் போராடியிருக்க கூடாது.   அவள் அமைதியாக இருந்து எங்களை கற்பழிக்க விட்டிருக்க வேண்டும்”    என்று கூறியிருப்பது இந்தியாவில் சில   இளைஞர்கள் இடையே நிலவும் கொடூர மனத்தை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது .

              சிறைத் தண்டனையோ மரண தண்டனையோ குற்றவாளிகள் மனதில் எந்தவித குற்ற உணர்வையும் தூண்டவில்லை. 
               அவர்கள் வருத்தப் பட்டதாகவும் தெரியவில்லை.       கற்பழிப்பது எங்கள் உரிமை என்று கூட இவர்கள் கூறலாம்.
               பேட்டி கொடுக்க அனுமதித்தது அதை பி பி சி ஒளிபரப்பியது மத்திய அரசு அதை தடுக்க முயற்சிப்பது இவைகள் எல்லாம் ஒருபுறம இருக்க     குற்றவாளிகளின் மனோபாவம்தான் மக்கள் கவனிக்க வேண்டிய பிரச்சினை. 
                 காந்திஜியா அல்லது வேறு யாருமா என்பது நினைவில்லை.    ஆனால் ” கற்பழிப்பை சமாளிப்பது அதை அனுமதித்து விடுவதே” என்ற , குற்றங்களை எதிர் கொள்ளும் வாதம் நினைவுக்கு வருகிறது. 
               கடுமையான தண்டனைகள் குற்றங்களை குறைக்கும் என்பதும் கேள்விக் குறியாகி இருக்கிறது. 
                டெல்லியில் ஒரு வெளிநாட்டுப் பயணி தான் ஒரு சாதுவால் கற்பழிக்கப் பட்டதாக நேற்றுதான் புகார் கூறினார். 
             ”    ‘இந்தியாவின் மகள்  ” என்பது ஆவணப் படத்தின் தலைப்பு. ” “இந்தியாவின் மானம் ” என்று போட்டிருக்கலாம். 
                 

       

வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)