சட்டம்- குழந்தை திருமண தடை சட்டம் முஸ்லிம்களுக்கும் பொருந்தும்- உயர் நீதி மன்றம்
Share
ஷரியத் சட்டம் 1937 ன்படி பெண் பருவம் அடைந்தபின் திருமணம் செய்ய உரிமை உண்டு என்று மனு செய்தார் பெண்ணின் தந்தை. முஸ்லிம் பெண்ணுக்கு உரிய வயது வரவில்லை என்பதால் குழந்தை திருமண தடை சட்டத்தை அமுல் படுத்த கோரி பெரம்பலூர் மாவட்ட அதிகாரி கொடுத்த மனுவை கீழ் நீதிமன்றம் ஏற்றது.
உயர் நீதி மன்றம் சென்றார் தந்தை. நீதிபதி சி .டி. செல்வம் வழக்கை விசாரித்து குழந்தை திருமண தடை சட்டம் அமுலில் இருக்கும்போது குழந்தை தாய்மார் உருவாக இந்த நீதிமன்றம் அனுமதிக்காது என்று தீர்பளித்த நீதிபதி கீழ் நீதி மன்றம் கொடுத்த ஆணையை உறுதி செய்தார்.