சுஷ்மா ஸ்வராஜும் மங்கள சமரவீரவும் நடத்திய பேச்சு வார்த்தைக்குப் பின் மத்திய அரசு ஒரு கூட்டத்தைக் கூடி அதில் தமிழக அரசின் பிரதிநிதியை அனுப்ப கோரியது. முதல்வர் ஒ.பி.எஸ். ஒரு கடிதத்தை அனுப்பி அதில் அகதிகளை திருப்பி அனுப்பும் காலம் கனியவில்லை என்பதை சுட்டி காட்டி கூட்டத்தில் பங்கேற்க யாரையும் அனுப்ப வில்லை. கடிதத்தில் எழுதியதையே கூட்டத்தில் பங்கேற்று வலியுறுத்தி இருக்கலாமே என்று கலைஞர் சுட்டி காட்டியதை கடுமையாக சாடி ஒ.பி.எஸ். அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மொத்த அகதிகள் 3,04,269 பேரில் 2,12,000 பேர் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரின் இலங்கைக்கு திரும்பி விட்டனர். அவர்களது அனுபவம் என்ன என்பதை இந்திய அறிந்து கொள்ளவில்லை.
இந்தியா அகதிகளை அகதிகளாக நடதுவதில்லை . அவர்களை அயல்நாட்டவர் சட்டம் மற்றும் குடியுரிமைச்சட்டம் ஆகிய வற்றை மீறி சட்டத்துக்கு புறம்பாக குடியேறிய வர்களுக்கு தற்காலிகமாக உதவிக் கொண்டுள்ளது.
அகதிகள் அவர்களாக விரும்பும் வரை அவர்களை திருப்பி அனுப்பும் பேச்சே கூடாது.
அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை விரும்பினால் கொடுக்க வேண்டும்.
உதவித் துகையை அதிகப் படுத்தவேண்டும். திபெத்திய அகதிகளுக்கு பல மாநிலங்களில் நிலம் ஒதுக்கீடு செய்யப் பட்டிருப்பது போல இவர்களுக்கும் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
திபெத்திய அகதிகள் தங்களின் அரசை புலம் பெயர்ந்து இந்தியாவில் தர்மசாலாவில் செயல்பட அனுமதி அளித்திருப்பதை நினைவில் இருத்தி இலங்கையில் அரசியல் தீர்வு ஏற்பட வில்லை என்றால் இங்கு ஈழ அரசு புலம் பெயர்ந்து அமையும் என்ற நிலைப்பாட்டை இந்தியா எடுத்தால் ஈழப் பிரச்சினை ஒரே நாளில் தீர்ந்து விடும்.
—
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)