அ.தி.மு.க. அரசில் அதிகாரி தற்கொலைக்கு அமைச்சர் காரணமா? விசாரணை தாமதம் ஏன் ?

Share
         நெல்லை மாவட்ட வேளாண துறை அதிகாரி முத்துகுமாரசாமி நேர்மையானவர் என்று பெயர் எடுத்தவர்.
         நான்கு ஓட்டுனர்கள் பதவிக்கு முறைப்படி தேர்ந்தெடுக்கப் பட்டவர்களை நியமிக்க முடியாமல் , மேலிடம் கோரிய ஊழல் பணத்தை தர முடியாமல் , மன  உளைச்சலுக்கு ஆளாகி , ரெயிலில் பாய்ந்து உயிரை விட்டார் என்பதும் அதற்கு அமைச்சர் அக்ரி கிருஷ்ணமுர்த்தி தான் காரணம் என்றும் சந்தேக வலைகள் எழுவதாக ஜூனியர் விகடன் எழுதியது.
       பல கட்சிகளும் அரசு ஊழியர் சங்கங்களும்  சி.பி.ஐ.விசாரணை கோரி போஸ்டர்கள் ஒட்டினார்கள்.
      குடும்ப பிரச்சினை தான் காரணம் என்று அமைச்சர் பேட்டி கொடுக்கிறார்.
     அரசு நிர்வாகத்தில் புரையோடிப் போயிருக்கும் அவல நிலைக்கு இதைவிட உதாரணம் இருக்க முடியாது.
     திடீரென அவரை மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவித்து ஜெயலலிதா உத்தரவிடுகிறார்.
   அமைச்சர் பொறுப்பில் இருந்தும் விடுவிக்க வேண்டும் என
ஈ .வி.கே.எஸ்.இளங்கோவன் கோரிக்கை விடுக்கிறார்.
    மௌனம காக்கிறார் முதல்வர்.    மடியில் கனம இருந்தால்தானே வழியில் பயம்.
    சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடாதவரை சந்தேகம் வலுத்துக் கொண்டே போகும்.      எச்சரிக்கை! எச்சரிக்கை!!

வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

This website uses cookies.