2006 ல் திமுகவின் தமிழக அமைச்சரவை விவாதித்து திட்ட அறிக்கை தயாரிக்க டெல்லி மெட் ரோவிடம் பொறுப்பை ஒப்படைத்து அந்த அறிக்கைக்கு 07.11.2007 ல் அமைச்சரவை ஒப்புதல் கொடுத்து , 03.12.2007 ல் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் பதிவு செய்து, 21.11.2008 ல் மத்திய அரசும் ஜப்பான் அரசும் டோக்கியோவில் ஒப்பந்தம் போட்டு அதற்கு 28.01.2009 ல் மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் கொடுத்து 10.06.2009 ல் மு.க. ஸ்டாலினால் திட்டப் பணிகள் துவங்கி வைக்கப் பட்டு 15.02.2011 ல் மத்திய அரசு , மாநில அரசு, மற்றும் மெட்ரோ கம்பனிகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இறுதியாக 29.06.2015 ல் ஜெயலலிதாவால் துவங்கி வைக்கப் பட்டது.
பெருந்தன்மை ஆட்சியாளர்களுக்கு அவசியம். மற்றவருக்கு உரிய பங்கை அளிப்பதில் அரசியல் செய்வது,தன் மதிப்பை தானே குறைத்துக்கொள்ள முற்படுவது போலாகும். முதலீட்டளவில் மற்ற மெட்ரோக்களை விட சென்னை மெட்ரோ அதிக முதலீடு செய்திருக்கும் என்பது உண்மைதான். ஆனால் அதற்காக அதிக கட்டணம் கொடுக்க சென்னை வாசிகள் கடமைப் பட்டவர்கள் அல்ல.
பங்குதார் என்ற அடிப்படையில் கட்டண சமத்துவம் நிலவ செய்வதில் அரசுக்கு உரிய பொறுப்பை எடுத்துரைத்து கட்டண குறைப்பு செய்து முதல் வகுப்பை ஒழித்து அவசியமான சீர்திருத்தங்களை செய்தால் சென்னை மக்கள் நன்றி சொல்வார்கள்.
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)
vaithiyalingamv@gmail.com
This website uses cookies.