அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த சையத் பரித் கான் என்பவர் மீது நாகாலாந்து பெண் ஒருவரை கற்பழிப்பு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு திமாபூர் சிறையில் அடைக்கப் பட்டிருந்தார்.
சிறைக்குள் புகுந்த ஐந்தாயிரம் பொதுமக்கள் அவனை வெளியே இழுத்து வந்து நிர்வாணமாக்கி பொது இடத்தில அடித்தே கொன்றிருக்கிறார்கள்.
துப்பாக்கி சூடு நடந்ததில் ஒருவர் இறந்திருக்கிறார். .அதிகாரிகள் சஸ்பெண்டு ,விசாரணை, எல்லாம் நடந்து வருகிறது.
இந்த நிகழ்வு காட்டும் உண்மைகள் என்ன?
கற்பழிப்பு நடத்தியவன் முஸ்லிம் என்பதாலும் வெளி மாநிலத்தவன் என்பதாலும் மக்கள் சட்டத்தை தங்கள் கையிலே எடுத்துக் கொண்டார்களா?
எவ்வளவு பெரிய குற்றம் என்றாலும் மக்கள் தண்டனை தருவது சரிதானா?
டெல்லியிலே வட கிழக்கு மாநில இளைஞன் ஒருவன் ஒரு சிறிய சண்டையிலே அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் இதற்கு தொடர்பு உடையதா?
மத்திய மாநில அரசுகள் விழித்துக் கொண்டு சட்டத்தை நிலை நிறுத்தா விட்டால் – மக்களே நீதி வழங்கும் இந்த காட்டுமிராண்டித்தனம் பரவ வாய்ப்புகள் அதிகம்!!!
—
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)