ஜெயலலிதாவின் கைப்பாவையா வைகோ ? எதிர்ப்பு ஓட்டுகளை பிரிக்க கூட்டியக்கமா ? நரியின் தலைமையில் வேட்டைக்கு செல்லும் ஆடுகளின் கதி என்ன ஆகும்? திருமாவும் காம்ரேடுகளும் சிந்திப்பார்களா?

Share
            தேர்தல் நெருங்க நெருங்க ஆளும் கட்சியின் சதிராட்டங்கள்  தொடங்கி விட்டன.
               சட்ட மன்ற தேர்தல் என்றால் ஒரு நிலைப்பாடு பாராளுமன்ற தேர்தல் என்றால் வேறொரு நிலைப்பாடு என்பது வைகோவுக்கு கை வந்த கலை.
              1996 ல் மார்க்சிச்டுகளோடு கூட்டணி.  2001 ல் தனித்து போட்டி. தி மு க வின் வெற்றியை நிறைய தொகுதிகளில் வாக்குகளை பிரித்து பறித்தார்.  2006  ல் அ தி மு க வோடு கூட்டு . 35  இடங்களில் போட்டியிட்டார். 2011 ல் அ தி மு க கைவிட்டதால் போட்டியிடவே இல்லை.
ஆனால் அனைத்து தேர்தல்களிலும் தி மு க வை எதிர்ப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
           இப்போது மக்கள் நல கூட்டியக்கம் என்ற பெயரில் இரண்டு கம்யுனிஸ்டுகள் தொல் திருமா ஆகிய நால்வரும் கூட்டணியாம்.
            நிற்கும்போதே  தோற்போம் என்று தெரிந்தே நிற்கிறார்கள். ஆனால் தேர்தலுக்கு மட்டும் அல்ல இந்த கூட்டியக்கம் என்று வேறு பேட்டி தரு;கிறார் வைகோ.
            ஆறு கட்சியாக ஆரம்பித்து தமிழருவி மணியனும் ஜவஹரில்லாவும் கழன்று கொள்ள நாலு கட்சி கூட்டணியாக மாறியது .
                 இவர்கள் ஆட்சியை விட்டு அகற்றப்பட வேண்டிய அதிமுகவையும் , ஆட்சியிலேயே இல்லாத தி மு க வையும் ஒன்றாக உருவகப் படுத்தி கேலிச்சித்திரங்கள்  வருவதைப் பார்த்து வைகோவின் சுயரூபம் அம்பலமாகி வருகிறது.
            இவரோடு கூட்டு சேர்ந்திருக்கிற அனைவரும் தேர்தல் வரை கூட்டணியில் நீடிப் பார்களா.?

This website uses cookies.