டாஸ்மாக் கடைகளை மூட வழிகாட்டும் கோனூர் நாடு!!! பொதுமக்களே மதுக்கடைகளை பூட்டினார்கள்? அறுபது நாட்களில் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் சம்மதம்!!!!!

              ;ஒரத்தநாடு தாலுகா கோனூர் நாடு என்று அழைக்கப் படும்        18 கிராமங்களை உள்ளடக்கிய  11 ஊராட்சிகளில் தீர்மானம் போட்டு தங்கள் பகுதிகளில் இனி மதுக்கடை களை அனுமதிப்பதில்லை என்று முடிவு எடுத்து கடைகளை பூட்டி விட்டார்கள்.  
            இதற்கு அ.தி.முக. , தி. மு. க. என்று எல்லா கட்சிகளும் ஆதரவு தரவே உள்ளூர் அமைச்சர் வைத்திலிங்கமும் கண்டு கொள்ள வில்லையாம். 
             இரண்டு நாட்கள் முன்பு இரண்டு இளைஞர்கள் குடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் சென்று விபத்துக்கு உள்ளாகி இறந்து போன சம்பவம் இந்த புரட்சி கரமான முடிவிற்கு மக்களை தள்ளி இருக்கிறது. 
            எது எப்படியோ இந்த முடிவை எல்லா தரப்பு மக்களும் தமிழகம் தழுவிய அளவில் எடுத்தால் டாஸ்மாக் கடைகள் காணாமல் போய் விடும். 
               ஏனென்றால் வருவாய்க்கு  ஏங்கும்  மாநில அரசு தானாக இந்த முடிவை எடுக்க வாய்ப்பேயில்லை     கடன் பளுவில் தள்ளாடும் அரசு எப்படி முடிவெடுக்கும்? 
                டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டுப் போடும் போராட்டம் பரவினால்  நாட்டுக்கு நல்லது தானே.?  
               மக்கள் சட்டத்தை தாங்களே கையில் எடுத்துக் கொள்வது என்பதை ஏற்க முடியாதுதான். 
              பொறுக்க முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப் பட்டு விட்டார்கள் என்பதை அரசு உணர இது ஒரு வாய்ப்பாக அமைந்தால் நல்லது . 
            பரவட்டும் போராட்டம்!!!!!
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)