ஜெயலலிதாவுக்கு உடல் நலமில்லை என்று அவரே அறிக்கை வெளியிட்டு அப்துல் கலாம் மறைவுக்கு அஞ்சலி செலுத்த இயலாமல் போனதாக கூறியிருந்தார்.
ஆனால் நரேந்திர மோடி சென்னை வந்தபோது அவரை விமான நிலையத்தில் வரவேற்றதுடன் நில்லாது பொது நிகஷ்ச்சியில் மோடி கலந்து கொண்டு விட்டு ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டுக்கு வந்தவரை வரவேற்று அவருக்கு விருந்தளித்து 21 கோரிக்கைகள் கொண்ட மனுவையும் கொடுத்து தனது உடல் நலத்தை வெளிப்படுத்தினார் .
எல்லார மனதிலும் கூட்டணிக்கு ஆச்சரியமா என்ற கேள்வி எழுவதை தடுக்க முடியாது. அதே நேரத்தில் மதுரையில் பேசிய
பா ஜ க தலைவர் அமித் ஷா தமிழகத்தில் ஊழல் முதல் இடம் பிடித்திருக்கிறது என்று பேசியிருக்கிறார். அதே சொத்துக் குவிப்பு ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டு ,விடுவிக்கப்பட்டு மேன்முறையீட்டை உச்ச நீதிமன்றத்தில் சந்திக்க இருக்கும் ஜெயலலிதா அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலை சந்திக்க இருக்கும் நிலையில் அவரை மோடி தேடிச்சென்று சந்திக்கிறார் என்றால் அதற்கு அரசியல் முக்கியத்துவம் இல்லை என்று யாராவது சொன்னால் அது பொய் .
ஜெயலலிதா சனாதன தர்மத்தில் நம்பிக்கை உள்ளவர். அவரை இந்து ஆதரவு சக்தியாகத்தான் பா ஜ க பார்க்கிறது. 1998 ல் தீண்டத்தகாத கட் சியாக இருந்த பா ஜ க வோடு கூட்டணி வைத்து அதற்கு ஒரு மரியாதையை ஏற்படுத்தி கொடுத்தவர் ஜெயலலிதா.
வாஜ்பாய் தனது கோரிக்கைகளுக்குஇணங்க வில்லை என்றதும் 13 நாட்களில் தனது ஆதரவை வாபஸ் பெற்றுக்கொண்டு ஆட்சியை கவிழ்த்ததும் அந்த சூழ்நிலையில் குறைந்த பட்ச செயல் திட்ட நிபந்தனையின் அடிப்படையில் கலைஞர் பா ஜ க வோடு கூட்டணி வைத்து அடுத்த ஆட்சி அமைய வழி வகுத்தார்.
இன்றைக்கு மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா ஜ க வின் ஆதரவு பல வழிகளிலும் ஜெயலலிதாவுக்கு தேவை. பா ஜ க வுக்கும் தமிழ் நாட்டில் வேரூன்ற ஜெயலலிதாவின் ஆதரவு தேவை. சனாதன தர்மத்தை நிலை நாட்ட பகுத்தறிவு இயக்கமாம் தி மு க வை பலவீனமாக்க ஜெயலலிதா கையில் எடுத்திருக்கும் ஆயுதம்தான் பா ஜ க ஆதரவு நிலைப்பாடு.
ஆனால் தமிழக மக்கள் இவர்களின் சதிகளை அடையாளம் கண்டு கொள்ள இயலாதவர்களா என்ன?
அகற்றப்ட வேண்டிய ஆட்சி ஜெயலலிதாவின் ஆட்சி என்ற கருத்து உடையவர்கள் , குறைந்த பட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் ஒன்று பட வேண்டிய தருணம் இது.
மாறாக ஆட்சியில் இல்லாத தி மு க வின் கடந்த கால தவறுகளை சுட்டிக் காட்டி பேசுபவர்கள் உண்மையில் ஜெயலலிதாவின் எதிர்ப்பு சக்திகளை பிரிக்கும் வேலையில் தெரிந்தோ திட்டமிட்டோ இறங்கியிருக்கிறார்கள் என்றுதான் பொருள் .
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)