ஈ வி கே எஸ் இளங்கோவன் கொடும்பாவி எரிப்பு காங்கிரஸ் அலுவலகங்கள் மீது தாக்குதல் , என்று கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக தமிழகம் முழுவதும் ரணகளம் ஆனது.
மோடி- ஜெயலலிதா சந்திப்பு பற்றி இளங்கோவன் சொல்லியது ஆட்சேபகரமானது என்றே வைத்துக் கொள்வோம்!!! 50 நிமிடங்கள் என்ன பேசினார்கள் என்று கேட்பது வேறு. தனிமையில் என்ன செய்தார்கள் என்று கேட்பது வேறு!
அதற்குத்தான் அரசை விட்டு அவதூறு வழக்கு தாக்கல் செய்தாகி விட்டதே! பிறகு ஏன் தமிழகம் ஸ்தம்பிக்க வேண்டும்?
தேசீய அளவில் இந்த ஆர்பாட்ட செய்திகள் பிரபலம்! சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய அரசே ஆர்ப்பாட்டங்களை தூண்டலாமா?
தொடங்கிய உடனே முதல்வர் அறிக்கை விட்டிருக்க வேண்டும்! ஆனால் பத்து நாட்களுக்கும் மேலாக எல்லா நகரங்களிலும் அ தி மு க வி னர் அராஜகங்களை நிறைவேற்றிய பின்னர் இன்று அறிக்கை விடுகிறார் ‘ போதும் நிறுத்திக் கொள்ளுங்கள் ??!!! அப்படியானால் இதுவரை நடந்தது எல்லாம் நீங்கள் சொல்லித்தானா?
இதுவரை மௌனம் காத்து வேலை முடியட்டும் என்று
காத்திருந்தீர்களா?
சாதனை என்று ஏதாவது இருந்தால் எல்லாரையும் பயத்தில் வைத்திருந்தது தானோ?