வைகோவை தொடர்வாரா மருத்துவர் ராமதாஸ் ?

வைகோ வெளியேற வேண்டும் என்றார் சுப்ரமணியன் சுவாமி . வெளியேறி விட்டார் வைகோ. 
இப்போது மருத்துவர் ராமதாஸ் விடுதலை புலி ஆதரவாளர் தலித் விரோதி எனவே அவரும் வெளியேற வேண்டும் என்கிறார். 
மருத்துவர் ராமதாஸ் பற்றி இப்போதுதான் தெரியுமா?  கூட்டு சேர்ந்த போது தெரியாதா? 
முதன் முதல் பா.ஜ.க வுடன் கூட்டு சேர்ந்து பிறரும் சேர தூண்டு கோலாக இருந்தவர் வைகோ. 
பதவி ஏற்க ராஜ பக்சேவை அழைத்த உடனே எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார் வைகோ. 
இலங்கைப் பிரச்னையில் முந்தைய காங்கிரஸ் அரசு கொண்டிருந்த கொள்கையே மோடி அரசிலும் தொடர்வது கொடுமை. 
பிரதமர் மோடிக்கு  ராஜபக்சே மீண்டு ம் வெற்றி பெறுவதில் அப்படி என்ன அக்கறை. ?
இனப்படுகொலையாளன் எப்படி நண்பன் ஆனான்? 
ஐ நா மன்றத்தின் போர்குற்ற விசாரணைக்கு இந்தியா ஒத்துழைப்புகொடுக்க; போகிறதா இல்லையா என்பதில் இருக்கிறது மோடி நல்லவரா கெட்டவரா என்பது. 
தமிழர்களுக்கு அரசியல் தீர்வு என்பதை யாரும் மறந்து கூட பேச மறுப்பது உச்ச கட்ட கொடுமை. 
தமிழகத்தில் பா ஜ க வளர வேண்டுமா வேண்டாமா என்பதை விட மோடியின் நம்பகத் தன்மையை சோதனைக்கு ஆளாக்குவது இலங்கைத்தமிழர் பிரச்சினை ஆகத்தான் இருக்கும். 
சு.சாமியை முதலில் வாயை மூடச்  சொல்லுங்கள்.  அல்லது அவரை வெளியேற்றுங்கள்.    
இரண்டும் நடக்கா விட்டால் மருத்துவர் ராமதாஸ் வைகோவை பின்பற்றுவது வதே  நல்லது.