சென்னையில் இயங்கி வரும் செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனத்தை திருவாரூரில் உள்ள மத்திய பல்கலை கழகத்தின் ஒரு பகுதியாக மாற்ற மத்திய அரசின் நிதி ஆயோக் பரிந்துரைத்து நடவடிக்கை தொடங்கப் பட்டு உள்ளது.
இதை எல்லாரும் எதிர்த்து குரல் கொடுத்து வருகையில் முதல் அமைச்சர் தனக்கு இது தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை என்ற பதிலை சொல்லி விட்டு அமைதியாகி விட்டார்.
இந்தி சமஸ்க்ரிதம் ஆகிய மொழிகள் தவிர்த்து வேறு எந்த மொழி பற்றிய ஆய்வும் நடத்த தேவையில்லை என்ற முடிவை மத்திய அரசு எடுத்து விட்டதாகவே தோன்றுகிறது.
தன்னாட்சிகொண்ட அமைப்பாக செயல் பட்டால்தான் ஆய்வறிஞர் களுக்கு நிதி நல்கி ஆராய்ச்சியில் ஈடுபட வைக்க முடியும். அதற்கான நிதியையும் மத்திய அரசுதான் தர வேண்டும்.
எவரையும் நிரந்தர பணியில் அமர்த்தாமல் அனைவரையும் தற்காலிக பணியாளர்களாக கருதி நடத்துவதே தவறு.
பாரபட்சம் காட்டும் மத்திய அரசின் போக்கை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டிய மாநில அரசு பயத்தின் காரணமாக பணிந்து கிடக்கிறது.
தொடர்ந்து பா ஜ க வின் மத்திய அரசு தனது தமிழ் விரோத போக்கை கடைப் பிடிப்பது நல்லதல்ல.
முதல்வர் தகவல் இல்லை என்று சொல்கிறாரே தவிர மத்திய அரசை அணுகி இப்படி ஒரு கருத்துரு உருவாகியி ருக்கிறதா என்பது பற்றி மத்திய அரசின் கருத்தை கோரிப் பெற்றாரா? உத்தரவாதத்தை கேட்டாரா?
இந்த நடவடிக்கை மட்டும் அமுலுக்கு வந்தால் மேலும் நிலைமை மோசமாகும் என்பது மட்டும் உறுதி.