1500 புரோகிதர்கள் 500 உதவியாளர்கள் தினமும் ஐம்பதாயிரம் பேருக்கு உணவு என்று ஐந்து நாட்கள் சண்டி யாகத்தை நடத்துகிறார் தெலுங்கனா முதல்வர் சந்திரசேகர ராவ் .
எல்லாம் தன் சொந்த செலவு என்று சொன்னாலும் சுபிட்சம் வேண்டி அரசர்களை கொள்ளையடித்த கும்பல் இந்த காலத்திலும் இப்படி நம்ப வைத்து கொள்ளையடிக்கிரார்களே என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.
பா ஜ க கூட தங்கள் யாகத்துக்கு எதிரிகள் இல்லை என்று சொல்லிவிட்டு தங்கள் எத்திர்ப்பை மட்டும் பதீவு செய்திருகிரர்கள்.
சி பி எம் மட்டும்தான் தங்கள் எதிர்ப்பை வலுவாக பதிவு செய்திருக் கிறார்கள்.
பக்தி ஆன்மிகம் எல்லாம் அவரவர் தனி உரிமை. ஆனால் பொது வாழ்வில் இருப்பவர்கள் அதுவும் பதவியில் இருக்கும்போது கோடிக்கணக்கில் செலவு செய்ய நேரும்போது அதிகார அத்து மீறல் குற்றசாட்டிற்கு ஆளாகி விடக்கூடாது.
This website uses cookies.