கொலை நகராகும் தலைநகர் சென்னை??!! ஜெயிலுக்கு போக கொலை? தெருவில் அடித்து நகை பறிப்பு???!!

Share

சாதாரண குற்றங்களே அதிகரிக்கும் நிலையில் சென்னையில் எப்போது நடக்கும் குற்றங்களின் தன்மைகள் பயத்தை ஏற்படுத்து கின்றன.

மனைவி தன்னை விட்டு பிரிந்ததால் ஜான் என்பவன் ஜெயிலுக்கு போக எண்ணம கொண்டான்.    அதற்கு எத்தனையோ வழிகள் இருக்கையில் அவன் தேர்ந்தேடுத்த வழி கொலை.  குடிபோதையில் தெரு ஓரத்தில் நின்று கொண்டிருந்த  ராஜா  என்ற கூலித் தொழிலாளியை குத்திக் கொல்கிறான்.   இது தாம்பரத்தை அடுத்த கன்னட பாளையம் பகுதியில்.

இதுவரை மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து தெருவில் போகும்போது  செயின் பறித்தவர்கள் தெருவில் போகிற பெண்களை உருட்டு கட்டையால் தாக்கி சங்கிலி  பறிக்கிறார்கள்.. இது நடந்தது செங்குன்றத்தில் ஹேமாவதி என்ற பெண்ணுக்கு.

வணிகர்கள் மீது தாக்குதல் நடத்தும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை கோரி வணிகர் சங்கம் டி ஜி பி இடம் மனு கொடுக்கிறது.

குற்றம் செய்பவர்களுக்கு   ஏன் பயம் அற்றுப் போய் விட்டது.      இந்த ஆட்சியில் எப்படியும் தப்பித்து விடலாம் என்ற நிலை  இருப்பதாலா??!!

தினமும் நடக்கும் குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.  தன்மையும் மோசமாகிக் கொண்டே வருகிறது.

காவல் துறையின் நம்பகத் தன்மை குறைந்து கொண்டே வருவதை யார் தடுப்பது. ???

நிலைமை அத்து மீறும் முன் விழித்துக் கொள்ளுமா காவல் துறை ?    அதற்கு வழி விடுவார்களா  ஆட்சியாளர்கள்!!!

 

 

This website uses cookies.