சோ- ராமசாமி!
சிரிப்பு நடிகர் அறிமுகம்- அப்போதே சமூக மாற்றங்களை கொண்டு வந்த திராவிட பிரதிநிதி களை கிண்டல் செய்வதையே முக்கிய கொள்கையாக கொண்டவர்.
சமூக நீதிக்கு எதிரான கொள்கை களுக்கு வலு சேர்க்கும் விதத்தில் தொடர்ந்து செயல் பட்டவர்.
கொஞ்சம் கூட வெட்கப் படாமல் சமூக நீதிக்கு எதிராக தன் சமூகம் செய்த கொடுமைகளை எப்போதுமே கண்டு கொண்டு கொண்டதில்லை.
வெற்றி கண்ட எல்லாரையும் சாதி அடையாளத்தோடு குறிப்பிட்டு விட்டு தான் சார்ந்த பார்ப்பன சாதனையாளர்களை விட்டு விடுவது.
அவர் எதையாவது பாராட்டினால் உடனே முடிவுக்கு வந்து விடலாம் அது பிற்பட்ட தாழ்த்தப் பட்டவர்களுக்கு எதிரானது என்று.
வேண்டுமேன்றே தமிழ் மரபுக்கு எதிராக ஜ ஸ ஷ போன்ற வடசொற்களை பிடிவாதமாக துக்ளக்கில் பயன் படுத்தி வந்தவர்.
கலைஞரை வசை பாடிக்கொண்டே நட்பும் வைத்திருந்தவர்
தான் யாருக்கு எதிராக செயல்படுகிராரோ அவர்களில் சிலரை தன் ஆதரவாளராக மாற்றிக்கொள்ளும் திறன் படைத்தவர்.
ஜெயலலிதாவின் வேண்டப் பட்ட நண்பர்.
யார் இறந்தாலும் அவரது நல்ல பண்புகளை மட்டுமே கொண்டு மற்றவற்றை மறப்பது தள்ளுவது தமிழ் மரபு என்ற வகையில் அவரது துணிவு, நகைச்சுவை உணர்வு ,வருங்கால தலைமுறைக்கு வழிகாட்டியாக திகழும் என்பது உறுதி.
This website uses cookies.