மணிப்பூரில் மொத்தம் உள்ள 60 இடங்களில் பா ஜ க பெற்றது 21. காங்கிரஸ் பெற்றது 28. தேசிய மக்கள் கட்சி நாகா மக்கள் முன்னணி எல் ஜெ பி உள்பட மூன்று கட்சிகளும் பெற்றது 10. சுயேச்சை பெற்றது 1 இடம்.
பெரும்பான்மை பெறாவிட்டாலும் இதர பதினோரு இடங்களை வைத்திருந்த மூன்று கட்சிகளையும் ஒரு சுயேச்சை யையும் சரிக்கட்டி முப்பத்தி இரண்டு பேர் ஆதரவை திரட்டி ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது பா ஜ க. தனிப்பெரும்பான்மை பெற்ற காங்கிரசால் ஆட்சி அமைக்க முடியவில்லை.
அதேபோல் கோவாவிலும் மொத்தம் உள்ள 40 இடங்களில் காங்கிரஸ் பெற்றது 17 இடங்கள். பா ஜ க பெற்றது 13 இடங்களே . ஆனால் மகாராஷ்டிரா கோமன்டக் கட்சியின் 4 ; கி எப் பி யின் 3 மற்றும் சுயேச்சைகள் 3 ஆகிய பத்து பேற்றின் ஆதரவை பெற்று ஆட்சி மிக்க உரிமை கோருகிறது பா ஜ க. இதற்காக மத்திய அமைச்சர் பாரிக்கர் ராஜினாமா செய்துவிட்டு கோவா முதல்வர் பதவில் அமர வருகிறார். தனிப்பெரும்பான்மை பெற்ற காங்கிரசால் ஆட்சி அமைக்க முடியவில்லை.
ஆறு மாதங்கள் சட்ட மன்ற உறுப்பினர் ஆக இல்லாமே முதல்வர் பணியாற்றலாம். மூன்று மாதத்தில் ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் மத்திய அமைச்சராகலாம். பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறாரா என்பதை பார்க்க வேண்டும்.
ஆக எதை செய்தாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நிலைக்கு பா ஜ க வந்து விட்டது.
கோவாவில் உச்சநீதிமன்றம் தலையிட வாய்ப்பிருக்கிறது. தனிப்பெரும் கட்சி என்ற வகையில் முதல் வாய்ப்பை காங்கிரசுக்கு தந்திருந்தால் ஒருவேளை காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்பு வந்திருக்கலாம்.
பஞ்சாபில் பாடம் கற்றுக் கொள்ள தவறிய பா ஜ க கோவாவிலும் மணிப்பூரிலும் புதிய முறைகேடுகளை அரங்கேற்றி யுள்ளது.
இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.