ஒருசில லட்சங்கள் கடன் வைத்திருந்தாலே பத்திரிகைகளில் வெளியிட்டு அவமானப் படுத்துகிறது வங்கித் துறை.
ஆனால் 80000 கோடி ரூபாய் வாராக் கடன் வைத்திருப்போர் 57 பேர். அதாவது சராசரியாக ஒருவரின் பாக்கி 1403 கோடி . பட்டியலை ரகசியமாக உச்சநீதிமன்றத் திடம் கொடுத்த ரிசர்வ் வங்கி அதை வெளியிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டது.
ஆரம்பத்தில் ஏன் பட்டியலை வெளியிட மறுக்கிறீர்கள் ஏன் பொது மக்கள் உண்மையை தெரிந்து கொள்ளக் கூடாது என்றெல்லாம் கேள்விகள் கேட்ட நீதிபதிகள் திடீரென்று தங்கள் நிலையை மாற்றிக்கொண்டு , பட்டியலை வெளியிடுவதால் என்ன நடந்து விடும் என்று கேள்வி கேட்டு விட்டு அதைவிட ஏன் இப்படி வாராக் கடன் உருவாகிறது என்று ஆராயுங்கள் என்று அறிவுரை சொல்லிவிட்டது .
இவர்கள் பெயர்களை வெளியிடுவதால் பொதுமக்களுக்கு என்ன ஆகப போகிறது என்று வேறு கேள்வி கேட்டது உச்ச நீதி மன்றம்.
பொதுமக்களுக்கு ஏன் தெரியக்கூடாது என்பதற்கு பதில் ஏதும் இல்லை.
ரிசர்வ் வங்கியும் சரி உச்ச நீதி மன்றமும் சரி எல்லாமும் பெரு முதலாளிகள் நலன்களை பாது காப்பதில் மிகவும் அக்கறை காட்டுகிறார்கள்.
எந்தப் பெரு முதலாளியும் கடன் காரணமாக வாழ்விழந்தார் என்று சொல்ல முடியாது.
வங்கி கடன் போக தனி வாழ்க்கைக்கு தேவையான சொத்தும் வருவாயும் ஏற்பாடு செய்து கொள்கிறார்கள்.
ஒரு கடன் வாராக் கடன் ஆனால் அதை ஏன் இப்படி ஆனது என்று ஆய்வு செய்துதான் ஆக வேண்டும். அது வேறு. ஆனால் பெரு முதலாளிகள் கடன் வேறு சிறு வணிகர்கள், விவசாயிகள் , கடன் வேறு என்று பாகு படுத்தி பார்க்க கூடாது.
இப்படி இருந்தால் மத்திய அரசும் உச்சநீதி மன்றமும் இருப்பது மேல் தட்டு வர்க்கத்தினர் நலனை பாதுகாக்கவே என்பதாகிவிடும்.
உச்சநீதி மன்றத்தின் பார்வை மாற வேண்டும்.
This website uses cookies.