ஏற்கனவே ஜெயலலிதா -மோடி சந்திப்பை ‘கள்ள உறவு’ என்று வர்ணித்து வாங்கிக் கட்டிகொண்டவர் ஈ வி கே எஸ் இளங்கோவன்.
தன் கட்சி எம் எல் ஏ விஜயதரனியையும் கேவலமாக பேசி காவல் துறை புகார் வரை போய் தலைமை தலையிட்டு வாபஸ் பெற வைத்தது.
இப்போது பா ஜ க தலைவர் தமிழிசையை ‘ ‘கரகாட்டக்காரி’ ‘பொய்க்கால்குதிரை ஆட்டக்காரி’ என்று பேசி மீண்டும் தன் வக்கிர புத்தியை காட்டியிருக்கிறார்.
எதிர்ப்பு வலுத்ததும் வருத்தம் தெரிவிக்கிறேன் என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
குமரிஅனந்தன் மகள் என்றாலும் வசந்தகுமார் ப சிதம்பரத்தோடு சென்று சோனியாவிடம் புகார் சொன்னதில் அவருக்கு வருத்தம் இருக்கலாம்.
அதற்காக சக தலைவர் என்ற உணர்வு கூட இல்லாமல் தனிப்பட்ட முறையில் தரம் தாழ்த்துவது தன்னையே தாழ்த்திக் கொண்ட கதையாகி விட்டது.
வயதில் குறைந்தாலும் தான் பண் பட்டவர் என்பதை நிருபித்த தமிழிசை பாராட்டத்தக்கவர் . பெண்களை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறி இளங்கோவன் தலையில் குட்டியிருப்பது வரவேற்கத்தக்கது.
இளங்கோவன் இன்னும் முதிர்ச்சியடைய வேண்டும்.