இயக்குனர் கவுதமன் தமிழ் உணர்வாளர்.
இப்போது படம் ஏதும் செய்வதாக தெரியவில்லை.
போராட்ட குணம் உள்ளவர். சக தமிழ் இயக்கங்களுடன் இணைந்து பல போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார்.
அவர் நேற்று ரஜினி எங்கு போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து போட்டியிடப் போவதாகவும் அறிவித்தார்.
தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருப்பதாகவும் அதை நாங்களே நிரப்புவோம் என்றும் அறிவித்தவர் அதற்காக புதிய அரசியல் கட்சியை தொடங்க போவதாகவும் அறிவித்தார்.
கட்சி பெயர் கொடி எல்லாம் மாநாட்டில் அறிவிக்கப்படுமாம்.
அரசியல் கட்சி தொடங்குவது அவ்வளவு மலிவாக போய் விட்டது.
தமிழர்களை அவமானப்படுத்தியே தீருவது வீழ்த்தியே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் தமிழ் இன விரோதிகளுக்கும் இவர்களுக்கும் என்ன பெரிய வேறுபாடு இருக்கிறது. ?
ரஜினியே அரசியலுக்கு வருவது இன்னும் நிச்சயமாகவில்லை.
வந்து என்ன சொல்லப் போகிறார் என்பதும் தெரியவில்லை.
ரஜினி கமல் இருவருமே என்னப்பா உங்கள் கொள்கைகள் என்றால் தலை தெறிக்க ஓடுகிறார்கள்.
இவர் வந்து புதிதாக என்ன சொல்லப் போகிறார்.? எல்லா தமிழ் உணர்வாளர்களும் இப்போது சொல்லிக் கொண்டிருப்பதைதானே இவரும் சொல்லப் போகிறார். அதற்கு ஏன் புதிய கட்சி?
என்று நிற்கும் இந்த காமெடிகள்??!!