ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் ஆளுனர் மேதகு என்று அழைக்கப் பட்டார்.
மன்னரின் பிரதிநிதி அல்லவா? குடியாட்சிக்கு மாறி அறுபது ஆண்டுகள் ஆகியும் இன்னும் பல மன்னர் காலத்து பழக்கங்களை நம்மால் விட முடியவில்லை.
நீதிமன்றங்களில் மை லார்டு என்று அழைக்கும் வழக்கம் இன்னமும் தொடர்வது தெரிந்ததே. நீதிபதிகளே எங்களை அப்படி அழைக்காதீர்கள் என்று உத்தரவிட்டாலும் வழக்கறிஞர்கள் கேட்பதில்லை.
2012 ல் குடியரசுத் தலைவரை மாண்புமிகு என்றே அழைக்கலாம் என்று உத்தரவிட்ட பிறகும் அந்த வழக்கம் தொடர்கிறது.
அந்த வகையில் தமிழ்நாட்டு ஆளுநராக பொறுப்பேற்று இருக்கும் வித்யா சாகர் ராவ் அவர்கள் இனி மேதகு என்பதற்கு பதிலாக மாண்புமிகு என்றே அழைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருப்பது வரவேற்கத்தக்கது.
அடிமை மனப்பான்மை ஒழிய இன்னும் சீர்திருத்தங்கள் தேவை.