Connect with us

தமிழில் கேள்வி கேட்க அனுமதி மறுத்தால் இது எந்த நாட்டு பாராளுமன்றம் ?!

parliament

Latest News

தமிழில் கேள்வி கேட்க அனுமதி மறுத்தால் இது எந்த நாட்டு பாராளுமன்றம் ?!

பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் தமிழக உறுப்பினர்கள்  துணக்  கேள்விகளை  தமிழில் கேட்க சபாநாயகர் அனுமதி மறுத்திருப்பது அதிர்ச்சியை அளித்திருக்கிறது.

தமிழக மக்களின் உரிமைகளை  பறிக்கும் இந்த நடவடிக்கைக்கு ராகுல் காந்தி தனது கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார்.

இந்திய நாட்டு பாராளுமன்றத்கில் இந்த நாட்டு  மொழியான தமிழில் கேள்வி  கேட்க உரிமை இல்லையென்றால் இது எந்த நாட்டு பாராளுமன்றம் என்ற கேள்வி எழுகிறதா இல்லையா ? 

பாஜக  உறுப்பினர் அரவிந்த் குமார் சர்மா இந்தி இந்த நாட்டின் ஆட்சி மொழியாக அறிவிக்கப் பட வேண்டும் என்று பேசியதுதான் இந்த குழப்பத்திற்கு காரணம். பாஜக வின் அதிகாரபூர்வ நிலைப்பாடு என்ன?

இதை எதிர்த்து பேச மற்ற மொழி உறுப்பினர்களுக்கு உரிமை இல்லையா?

அதே நேரத்தில்   மத்திய சமஸ்கிரித பல்கலைகழக மசோதா மூலம் மூன்று சமஸ்கிரித பல்கலைகழகங்களுக்கு  மத்திய பல்கலை கழகங்களாக தகுதி  அளித்து சட்டம் நிறைவேற்றப்  பட்டிருக்கிறது. முன்பே மக்களவையிலும் இப்போது மாநிலங்கள் அவையிலும் நிறைவேற்றப் பட்டு விட்டதால் இனி  சட்டமாகிவிடும். இதர செம்மொழிகளுக்கு ஏன் இந்த சலுகை அளிக்கப்படவில்லை?

இனி இந்தி அல்லாத மாநில உறுப்பினர்கள் அனைவரும் அவரவர் தாய் மொழியில் மட்டுமே பேச வேண்டும் அதை பிற மொழிகளில் மொழிபெயர்த்து  தர வேண்டும் என்று முடிவெடுத்தால் இந்த பிரச்னைக்கு ஒரு தீர்வு காண வாய்ப்பிருக்கிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Latest News

To Top