பதினாறு ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்து புரட்சி செய்தவர் மணிப்பூரின் இரோம் ஷர்மிளா.
ராணுவத்திற்கு வழங்கப் பட்ட சிறப்பு சலுகை சட்டத்தை எதிர்த்து போராடியவர். ராணுவம் சுட்டுகொன்றால் விசாரணை இன்றி தண்டிக்க முடியும் என்பது சிறப்பு சலுகை.
கடைசியில் தேர்தல் வந்ததும் கட்சி ஆரம்பித்து போட்டியிட்டார். எதிர்த்து போட்டியிட்டதோ முதல்வர் இபோபி சிங்கை எதிர்த்து. பெற்றதோ 90 வாக்குகள்.
ஏன் மக்கள் அவரை புறக்கணித்தார்கள். ? இந்தக் கேள்விக்கு தக்க பதில் இல்லை.
பெண் என்பதால் புறக்கணித்தார்களா ? பண பலம இல்லை என்பதால் புறக்கணித்தார்களா ?
இனி தேர்தலில் நிற்க மாட்டேன் என்று அறிவித்துவிட்டார் ஷர்மிளா .
பத்து பெர்சென்ட் முதல்வர் என்று இபோபி சிங்கை விமர்சித்தார் பிரதமர் மோடி.
அவர் வெற்றி பெறுகிறார். ஷர்மிளா தோற்கிறார்.
நல்லவர்களும் பெண்களும் அரசியலுக்கு வந்து சாதிக்கத் துடிக்கிறார்கள்.
மக்கள் ஏற்றுக் கொள்ள தயாராக வில்லையே ?
This website uses cookies.