ஈழப்போர் உச்சத்தில் இருந்தபோது விடுதலை புலிகளின் கிழக்கு மாகாணத் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் என்கிற கருணா அம்மான் , துரோகியாக மாறி புலிகளை காட்டிக் கொடுத்து சிங்கள எஜமானர்களின் விசுவாச மிக்க ஏஜெண்டாக மாறிப் போனார்.
அவரை எம்பியாகவும் அமைச்சராகவும் ஆக்கியது ராஜபக்சேயின் ஆட்சி.
ஆட்சியும் மாறியது. காட்சியும் மாறியது.
சிறிசேன அதிபராக வந்ததும் பழைய தமிழ் துரோகிகளை வலுவாக வைத்திருக்க விரும்பாமல் அவர்களை முடக்கும் முடிவில் , விசாரணைக்கு அழைத்து கைது செய்து விட்டது .
அமைச்சராக இருந்தபோது வாகன பயன்பாட்டில் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு.
கைது செய்ய ஏதோ ஒரு சாக்கு.
துரோகிகளுக்கு லஞ்சப் பணம் கொடுத்தீர்களே அது எந்த சட்டத்தின் கீழ். ?
ஆக பயன்பாடு முடிந்ததும் துரோகிகள் வலுவோடு இருப்பது என்றும் ஆபத்து என்பதால் அவர்களை முடக்கும் முடிவுக்கு சிங்களர் அரசு வந்துள்ளது.
போர் முடிந்து ஏழாண்டுகள் ஆகியும் அரசியல் தீர்வு பற்றி துரோகிகள் பேசவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
துரோகிகளுக்கு எச்சரிக்கை.!!!