டந்த நான்கரை ஆண்டு காலத்தில் 24 முறை அமைச்சரவை மாற்றங்களை செய்திருக்கிறார் ஜெயலலிதா.
சமீபத்திய நீக்கம் டி கே எம் சின்னையா.
அரசியல் சட்ட பிரிவு 163 , 164 ன் படி அவர் எவரை வேண்டுமானாலும் அமைச்சராக வைத்துக் கொள்ளலாம் நீக்கலாம்.
அதற்காக காரணம் எதுவும் சொல்லாமல் நீக்குவதும் கொஞ்ச காலம் பொறுத்து மீண்டும் அவரையே சேர்த்துக் கொள்வதும் இது ஒன்றும் அவரது வீடு அல்லவே?
பொது வாழ்வில் வெளிப்படைத் தன்மை வேண்டுமா வேண்டாமா?
அதிகாரம் இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்ய முடியுமா ? முடியும் என்று வரிந்து கட்டிக் கொண்டு செயல் படுகிறார் ஜெயலலிதா. 110 விதி யை அவரைப்போல் தாறுமாராகவும் எக்குத் தப்பாகவும் பயன் படுத்தியவர்கள் யாருமே இல்லை.?
சட்டம் நடைமுறை, நாகரிகம், பண்பாடு, அனைத்தையும் தன் காலடியில் போட்டு மிதித்து எல்லாம் தனக்கு அடக்கம் எல்லாரும் எனது அடிமைகள் என்ற பாசிச போக்கில் பீடு நடை போட்டு தொடர்கிறார் ஜெயலலிதா?!!
ஒருவன் போனால் பல்லக்கு தூக்க நான் நீ என்று போட்டி போட கூட்டம் வரிசையில் காத்திருக்கையில் அவரது சாட்டை சுழல்வது நிற்காது.
முதல் அடிமை என்று பட்டம் சூட்டப் பட்ட ஒ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் வரிசையாக நீக்கப் படுவது தொடங்கி இருக்கிறது.
நல்ல அடிமைகள். அடித்தாலும் அழத் தெரியாத அடிமைகள்.