விருத்தாசலத்தில் ஜெயலலிதா பிரசாரம் செய்ய வந்தார்.
மதியம் பனிரெண்டு மணிக்கு கொண்டு வரப்பட்ட கூட்டம் மூன்று மணி வரை வெயிலில் காக்க வைக்கபட்டது.
மூச்சு திணறியும் மயங்கியும் மக்கள் விழத் தொடங்கினர்.
இதில் இருவர் பலியாகினர். வெளியேற முயற்சித்த மக்களை காவல் துறை விடவில்லை.
உடல் நலக் குறைவால் இறந்து விட்டதாக ஜெயலலிதா அறிக்கை விடுகிறார். தேர்தல் விதிமுறை அமுலில் இருப்பதால் நிதி உதவி பின்னால் வரும் என்று கூறியிருக்கிறார்.
அரக்கத் தனமாக ஜெயலலிதா நடந்து கொள்வதை அவர் அறிவாரா என்பதே கேள்வி.
அவரது பாணி பிறரை அடிமைகளாக பாவித்து நடத்துவதே? அவர் மாறப் போவதில்லை.
மக்கள் மாற வேண்டாமா ???!!!