பெருமழையால் மக்கள் படும் துயரங்கள் போதாது என்று கமலஹாசனும் ஒ பன்னீர்செல்வமும் அறிக்கை விட்டுக் கொண்டு பிரச்சினையை திசை திருப்ப முயற்சிப்பது படு கேவலம்?!
உங்களை புரிந்து கொள்ள முடியாதவர்களா பொதுமக்கள்.?
கமல்ஹாசன் யாரோ ஒரு பத்திரிகையாளருக்கு எழுதிய மின் அஞ்சல் தமிழாக்கம் செய்யப் பட்டு அதில் அவர் கட்டிய வரிப்பணம் என்ன ஆயிற்று என்று கேட்டதாக செய்தி வெளியானது.
கமல்ஹாசன் சொல்லியதும் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் அல்ல. பொத்தாம்பொதுவாக புலம்பியிருந்தார். அதை வைத்து யாரையும் அவர் குற்றம் சாட்டுவதாக நினைக்க இடம் இல்லை.
தங்களைத்தான் குற்றம் சாட்டுகிறார் என்று அனுமானித்துக் கொண்டு ஒ பன்னீர்செல்வம் ஒன்றரை பக்க அறிக்கை வெளியிட்டு பரிதவிப்பில் இருக்கும் மக்களை இன்னும் குழப்பி விட்டு விட்டார்.
கருத்து கந்தசாமி , குழப்ப பிசாசின் கோரப்பிடியில் சிக்கியிருக்கிறார் பிதற்றி இருக்கிறார் , தீய சக்திக்கு விலை பொய் விட்டார், மலிவான விளம்பரம் தேடுகிறார் ,பிதற்றல் மொழி பேசுகிறார் என்று கமலா ஹாசனை வறுத்து எடுத்ததுடன் கும்பகோணம் தீ விபத்தில் 12 லட்ச ரூபாய் நிதி அறிவித்து ஏமாற்றியதை போலவும் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் நன்கொடை தருவதாக பொய் சொல்லியதை போலவும் குற்றச்சாட்டுகளை அடுக்கி ஒ பி எஸ் அறிக்கை வெளியிட்டார்.
சரண்டர் ஆன கமல் ஹாசன் நான் சொன்ன வார்த்தை யார் மனதையாவது புண் படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்க கடமை பட்டு இருக்கிறேன் என்று பின்வாங்கி விட்டார்.
பெரிதாக்க எண்ணிய ஒ பி எஸ் , தன் அறிக்கை புஸ்வாணம் ஆனதே என்று புலம்பி இருப்பார்.
எப்போதும் போல், படம் பண்ணுவது காசு பார்ப்பது என்று காரியமாற்றிக் கொண்டு இதர பிரச்சினைகளில் மெளனமாக இருப்பதே கமலுக்கு நல்லது.
அல்லது தனக்கு வாரிசாக கமல் வரட்டுமே என்று ஜெயலலிதா நினைத்திருப்பாரா?
ஏனென்றால் எதிர் முகாமிலும் தங்கள் ஆட்களை நிறுத்துவதுதானே அவர்கள் வழக்கம்.
This website uses cookies.