காஷ்மீர் – முடிவடையாத போராட்டங்களை சந்திதித் துக்கொண்டிருக்கிறது.
பாகிஸ்தான் ஒருபுறம் பயங்கரவாதிகளை அனுப்பி அழிவு வேலைகளை செய்வதுடன் அப்பாவி காஷ்மிரி இளைஞர் களை வசப்படுத்தி இந்திய அரசுக்கு எதிராக வன்முறையை தூண்டி விட்டு வருகிறது.
வயது முதிர்ந்த பெரியவர்கள் கூட தாங்கள் எவ்வாறு சிறு வயதில் இந்திய அரசுப் படைகளை எதிர்த்து கல்லெறிந்து பழகினோம் என்பதை கதையாக சொல்வதை பார்த்தால் இந்த போராட்டம் என்பது புதிதல்ல என்பது புரியும்.
காஷ்மீரிகள் இந்தியத்தோடு கலக்கவில்லையா? முஸ்லிம் என்ற மத அடையாளம் மட்டும்தான் பிரிவினைவாத உணர்விற்கு காரணமா?
வரலாற்று உண்மைகள் எதுவாக இருந்தாலும் கேள்வி ஒன்றுதான்.
இந்தியாவின் ஒரு பகுதியில் அந்த பகுதி மக்கள் மத ரீதியாக பிற பகுதிகளில் சிறுபான்மையாக இருந்தாலும் அந்தப் பகுதியில் பெரும்பான்மையாக இருந்தால் அவர்கள் மற்ற பகுதி பெரும்பான்மை மக்களோடு இணைந்து வாழ முடியாதா?
அவர்களின் முஸ்லிம் அடையாளம் பாகிஸ்தானோடு உணர்வுபூர்வமாக ஒன்று பட்டதா ?
தேர்தல் நடந்து அங்கு பாஜ க -பி டி பி கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தாலும் ஏன் அமைதி திரும்ப மறுக்கிறது.
பாகிஸ்தானை மட்டுமே காரணம் காட்டிக் கொண்டிருப்பது உண்மையல்ல.
என்ன செய்ய வேண்டும் என்று சொல்வது கடினம் .
தீர்வைச் சொன்னால் அது தவறாக பொருள் கொண்டு விடப் படலாம்.
தீர்வை காண்பது ஆள்வோர் கடமை.
ஒன்று மட்டும் உறுதி. நீண்ட காலம் இந்தப் போராட்டம் நீடித்தால் அது இந்திய ஜனநாயகத்தின் வெற்றியை கேள்விக்குறியாக்கி விடும்.
அது பிற மாநிலங்களிலும் எதிரொலிக்கலாம். அந்நிலை வராமல் தடுப்பது ஆட்சியில் இருப்போர் கடமை.
எதெற்கெடுத்தாலும் குற்றம் சொல்வோரை தேச விரோதிகள் என்று சாடுவது சிலருக்கு வாடிக்கை யாகி விட்டது. அடிமைகளாக வாழ்ந்தால்தான் குற்றம் சொல்லாமல் வாழ முடியும்.
மெகபூபா முப்தி சொல்லியதுபோல் உள்ளூர் இளைஞர்களின் தவறான புரிதல்கள் சரி செய்யப் பட வேண்டும். மாறாக அவர்களை பயங்கரவாதிகளை போல நடத்துவது தவறு. பதவியில் இருப்பதால் பொறுப்பாக பதில் சொல்கிறார். இதுவே எதிர்கட்சியில் இருந்திருந்தால் குரல் வேறு விதமாக ஒலித்திருக்கும்.
பிற மாநிலங்கள் ஒற்றுமையை காஷ்மீர் குலைத்துவிடக்கூடாது.