மத நல்லிணக்கத்திற்கு கோட்டை அமிர் பெயரில் விருதை வழங்கி வருகிறது தமிழக அரசு.
அதே கோவையில் இந்து முஸ்லிம் பயங்கரவாதிகள் தொடர்ந்து இயங்கி வருகிறார்கள்.
ஒரு இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் சிறை சென்று வந்த பாருக் என்ற இளைஞர் சிறையில் இருந்து வெளியே வந்தபின் நாத்திகப் பாதைக்குத் திரும்பி பகுத்தறிவு பேச ஆரம்பித்தார்.
கடவுள் மறுப்புக் கொள்கைகளை தன் இணைய தள முகவரியில் எழுதி வந்தார்.
கூட இருந்து முஸ்லிம் நண்பர்களே அவருக்கு விரோதிகளாக மாறி அவரை கொன்று போட்டிருக்கிறார்கள்.
கர்நாடகத்திலும் மகராஷ்டிரா விலும் குல்பர்கி , தபோல்கர் என்ற இருவரை நாத்திகம் பேசியதற்காக இந்துத்துவ பயங்கரவாதிகள் கொலை செய்தார்கள். இப்போது தமிழகத்திலும் அதே கலாசாரம் வேரூன்ற முயற்சிக்கிறது.
வெறியர்கள் எல்லா மதங்களிலும் இருக்கிறார்கள் என்பதற்கு வேறு சாட்சியம் தேவையில்லை.
முஸ்லிம் மத அமைப்புகள் தான் முதலில் இதை கண்டித்திருக்க வேண்டும்.
காவல் துறை மெத்தனம் காட்டக் கூடாது.