சசிகலா-
ஜெயலலிதாவின் தோழி- கூடவே இருப்பவர்- கணவரை பிரிந்து தோழியுடன் வாழ்பவர்- கிரிமினல் வழக்குகளில் ஜெயலலிதாவுடன் குற்றவாளிக் கூண்டில் நிற்பவர்- இதுவரை பொதுமேடைகளில் தன்னை அறிமுகப் படுத்திக் கொள்ளாதவர்-.
இவர் தகுதி என்ன என்பதை அ தி முக தொண்டன் தான் தீர்மானிக்க் வேண்டும்.
மற்றவர்களுக்கு இவர் வேண்டும் வேண்டாம் என்று சொல்ல உரிமை இல்லை.
ஆனால் ராமதாஸ் சொல்வது போல் சட்டத்துக்கு புறம்பான சக்தியாக அதிகாரம் செலுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
வேண்டும் என்றால் சட்டப் படியான அதிகாரத்தை எடுத்துக் கொண்டு செயல் படலாம் . அப்போதுதான் இவர் தகுதியாவர்தானா அல்லவா என்பது தெரியும்.
அதற்குள் பார்ப்பனீய சக்திகள் அவருக்கு எதிரான அம்புகளை ஏவி விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
எத்தனைதான் அவர்களின் அடிவருடிகளாக வாழ்ந்து வந்தாலும் அவர்களின் அதிகார ;மையத்தை தடம் மாற்றி விட முனைந்தால் எதிர்ப்பார்கள். அதுதான் அவர்கள் குணம்.
ஜெயலலிதாவின் சிகிச்சை பற்றி எல்லா வகையான கற்பனை கதை கட்டுரைகளையும் இவர்கள் புனைந்து வருகிறார்கள்.
ஆளுநர், மத்திய அரசு, அப்போல்லோ மருத்துவ மனை நிபுணர்கள், லண்டன் மருத்துவர், ஏய்ம்ஸ் மருத்துவர்கள் எல்லார் மீதும் கரை பூசும் முயற்சி இது.
கட்சிக்குள் குழப்பம் விளைவிக்க முனைந்து முடியாது என்று தெரிந்ததும் இப்போது வேறு எல்லா வகைகளிலும் குழப்பம் விளைவிக்க முயற்சிக்கிறார்கள்.
தமிழ் நாட்டைமைனாரிட்டிகள் தான் ஆள வேண்டும் என்பது விதியா என்ன?
ஓ பி எஸ் தன் ஆளுமையை நிரூபிக்க வாய்ப்பு கிடைதிருக்கிறது. எப்படி இயங்க போகிறார் என்பது தெரியவில்லை.
இதுவரை தன்னை நிருபிக்காதவர் சசிகலா!
நிரூபிக்க வாய்ப்பு தரும் முன்பே தகுயில்லாதவர் என்று சான்றளிப்பது சரியல்ல.
சசிகலா வரட்டும்- தன்னை நிரூபிக்கட்டும்!!! அதுவரை பொறுத்திருப்போம்!!!!