அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாலில் தனியார் நிறுவனங்கள் கலப்படம் செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டிய பிறகு ஆய்வுக்கு சென்ற மாதிரிகள் குற்றச்சாட்டை நிரூபித்த மாதிரி தெரியவில்லை.
இந்நிலையில் பால் முகவர்கள் சங்க செயலாளர் பொன்னுசாமியை அவர் ஒரு ப்ரோக்கர் என்று அமைச்சர் பேசினார். குற்றச்சாட்டை நிரூபிக்க வில்லை என்றால் அமைச்சர் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று பொன்னுசாமி பேட்டி கொடுக்கிறார்.
விமர்சித்த திமுகவின் முன்னாள் அமைச்சர் வைகை செல்வனை அவர் ஒரு அரசியல் விபச்சாரி என்றும் ஐநூறு ரூபாய் கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் பேசுவார் என்றும் பேட்டி கொடுத்தார் ராஜேந்திர பாலாஜி.
பதிலுக்கு வைகைசெல்வன் ராஜேந்திர பாலாஜி ஒரு பசை தடவி போஸ்டர் ஓட்டும் ஆள் என்றும் இன்னும் அவர் முதிர்ச்சி அடைய வில்லை என்றும் சேறு என்றும் சந்தனமாகாது என்றும் தான் தகுதியில்லாத அவரோடு சண்டையிட தயாராக இல்லை என்றும் திருப்பி சாடுகிறார்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார் என்று பேட்டியளிக்கும் பா ஜ க வின் சுப்பிரமணிய சாமி
” அவன் அரசியலுக்கு வரமாட்டான் ” என்று ஒருமையில் பேசுகிறார்.
தமிழக அரசியலின் தரம் எங்கே போய்கொண்டு இருக்கிறது. ?
நான்காம் தர மேடை பேச்சாளர்கள் எல்லாம் பெரிய பதவிகளுக்கு வந்த வினை !
முதல்வர் என்று ஒருவர் இருக்கிறாரா? அவருக்கு தன் அமைச்சர்களை கண்டிக்கும் தைரியம் வரவே வராதா?
அரி என்ற பாராளுமன்ற உறுப்பினர் தம்பிதுரையை கண்டிக்கிறார். வெற்றிவேல் அரியின் மீது பாய்கிறார். உட்கட்சி குழப்பம் எல்லையை தாண்டிக்கொண்டு இருக்கிறது.
எடப்பாடியோ எதையும் கண்டு கொள்ளாமல் தன் பாட்டுக்கு செயல் பட்டு கொண்டிருக்கிறார்.
யார் கட்டுப் பாட்டிலும் யாரும் இல்லை என்ற நிலை இங்கே . அவர்கள் கையில் ஆட்சி இருக்கிறது. மக்களுக்கு யார் பாதுகாப்பு?
முதல்வர் பழனிசாமி மௌனம் கலைக்கட்டும்??!!