நிர்பயா சம்பவங்கள் தமிழ் நாட்டிலும் தொடர்ந்து நடக்க ஆரம்பித்து விட்டன.
ஓடும பேருந்தில் நிகழந்த கொடுமையான நிர்பயா கற்பழிப்பு வழக்கு நாட்டையே உலுக்கியது. அதன் பின் நிர்பயா நிதி என்ற ஒன்றையே உருவாக்கி இதுபோல் பாதிக்கப் படும் பெண்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
வடநாட்டில் மட்டும் நடந்து வந்த இந்த காட்டுமிராண்டித்தனம் தமிழ் நாட்டிலும் தொடர்ந்து நடந்து வருவது அதிர்ச்சியளிக்கிறது .
தண்டணை விரைவாகவும் அச்சுறுத்தும் வகையிலும் இருந்தால்தான் குற்றவாளிகளுக்கு பயம் இருக்கும்.
தன்னை கற்பழித்த சாமியாரின் ஆணுறுப்பை அறுத்து எறிந்த பெண்ணின் துணிச்சல் எல்லாருக்கும் வர வேண்டும். சட்டத்தை கையில் எடுத்துக் கொள்வது தவறு என்று கூட சிலர் கூறினார்கள். ஆனாலும் பொதுவில் எல்லாரின் ஆதரவையும் பெற்றது அந்த பெண்ணின் நடவடிக்கை.
இந்தக் கயவர்களுக்கு அளிக்கப் படும் தண்டணை விரைவாகவும் இனி யாரும் இப்படி நடக்க அஞ்சும் வகையிலும் இருக்க வேண்டும்.
This website uses cookies.