அரியலூர் மாவட்டம் அனிதா என்ற மாணவி ப்ளஸ் டூ தேர்வில் 1176 மதிப்பெண் பெற்று மருத்துவம் படிக்க தேவையான கட் ஆப் மார்க் 196.75 எடுத்தும் நீட் தேர்வில் குறைந்த மார்க் எடுத்ததால் இடம் கிடைக்க வில்லை.
காரணம் நீட் தேர்வில் சி பி எஸ் சி பாட திட்டத்தில் கேள்விகள் கேட்கப் பட்டதுதான்.
மாநில பாடத்திட்ட மாணவர்கள் என்ன செய்வார்கள் என்ற கேள்விக்கு இறுதிவரை விடையே கிடைக்க வில்லை
உச்சநீதி மன்றம் வரை சென்று முறையிட்டும் அவருக்கு நீதி கிடைக்க வில்லை. தாழ்த்தப் பட்ட வகுப்பை சேர்ந்த அந்த பெண் விரக்தியில் தன் உயிரை மாய்த்துக் கொண்டது மாநிலம் முழுமைக்கும் மாணவர்கள் மத்தியில் போராட்ட உணர்வை தூண்டி விட்டிருக்கிறது.
அரசு அறிவித்திருக்கும் ஏழு லட்சம் உதவித் துகை பிரச்னைக்கு தீர்வா? போதுமா?
தற்கொலை பிரச்னைக்கு தீர்வல்ல என்ற ஞானோபதேசம் இந்த நேரத்தில் பயன் தருமா?
கல்வி மாநில பட்டியலில் சேர்க்கப் படும் வரை இந்த பிரச்னை நீடிக்கும்.
இது வரை நீட் தேர்வு இல்லாமல் படித்து மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள் தகுதி இல்லாதவர்களா?
ஒரே பாடத் திட்டம் ஒரே பயிற்சி தர முடியாதவர்கள் எதற்கு அகில இந்திய தேர்வு நடத்த வேண்டும் ?
உச்ச நீதி மன்றம் , மாநில அமைச்சர்கள் . தவறான உத்தரவாதம் தந்த மத்திய அமைச்சர்கள் எனு அனைவருமே இந்த கொடுமைக்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.
குறிப்பாக ஒரு ஆண்டுக்கு மட்டும் விலக்கு பெற்று தருவோம் என்ற மாநில அமைச்சர்கள் முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.
ஒரு நிமிடம் கூட தொடர கூடாத அரசாக எடப்பாடி அரசு மாறி விட்டது. பெரும்பான்மை இழந்த பின் உட்கட்சி பிரச்னை என்று காரணம் சொல்லி நீடிப்பது அநீதி.
மாநில அமைச்சர்களோடு பா ஜ க மாநில நிர்வாகிகள் கூட்டாக கலந்து ஆலோசிப்பது அவர்களில் கூட்டு முடிவை உறுதி படுத்துகிறது.
மோடி அரசின் உண்மை சொரூபம் தமிழர் நெஞ்சில் நிலைத்து நிற்க வேண்டும். காலம் வரும்போது தக்க பாடம் புகட்ட வேண்டும்.
This website uses cookies.